பிக் பேஷ் டி20 தொடரில் விளையாடவுள்ள தோனி அண்ட கோ. 3 இந்திய வீரர்களுக்கு வலை விரிக்கும் – அணி நிர்வாகங்கள்

Yuvraj

உலகம் முழுவதும் டி20 லீக் போட்டிகள் தற்போது பிரபலமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடப்பதைப் போன்று ஆஸ்திரேலியாவில் பிக்பேஷ் லீக் தொடர், பாகிஸ்தானில் பாகிஸ்தான் சூப்பர் லீக், வங்கதேசத்தில் வங்கதேச பிரிமியர் லீக், வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் கரீபியன் பிரீமியர் லீக் ஆகியவை நடைபெற்று வருகிறது.

Bbl

குறிப்பாக அனைத்து நாட்டு வீரர்களும் அனைத்து கிரிக்கெட் லீக் தொடர்களிலும் ஆடுவார்கள் ஆனால் இந்திய வீரர்களுக்கு மட்டும்தான் வேறு நாட்டில் லீக் தொடர்களில் ஆடக் கூடாது என்ற ஒரு சட்டம் இருக்கிறது. ஒருவேளை வீரர்கள் ஓய்வு பெற்று விட்டால் கிரிக்கெட் வாரியத்திடம் அனுமதி பெற்று விட்டு சென்று அங்கு ஆடலாம்.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா மற்றும் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் ஆகியோரை எப்படியாவது பிக் பேஷ் லீக் தொடரில் ஆட வைக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கடுமையாக முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Yuvraj 1

இந்த வருட பிக்பேஷ் லீக் தொடர் டிசம்பர் இரண்டாவது வாரத்தில் துவங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஆஸ்திரேலியாவில் இந்தியா சென்று டெஸ்ட் டி20 ஒருநாள் போட்டிகளில் விளையாட போகிறது. இதன் காரணமாக பல ஆஸ்திரேலிய முன்னணி வீரர்கள் இந்த தொடரில் விளையாட முடியாது.

- Advertisement -

Raina

இதனை சரி கட்டுவதற்காக இந்தியாவின் முக்கிய வீரரான சுரேஷ் ரெய்னா, மகேந்திரசிங் தோனி, யுவராஜ் சிங் ஆகியோரை பிக் பாஸ் லீக் தொடரில் விளையாட வைக்க தற்போது திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்த பேச்சுவார்த்தை விரைவில் நடக்கும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வட்டாரம் சார்பில் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.