
சர்வதேச போட்டிகளில் சதம் அடிப்பது அவ்வளவு எளிதல்ல. ஆனாலும் ஜாம்பவான் வீரர்கள் 50க்கும் மேற்பட்ட சதங்கள் குவித்து அசத்தியுள்ளனர். பல வீரர்கள் இரட்டை சதம் அடித்துள்ளனர். தற்போது சர்வதேச அளவில் அதிக சதங்கள் குவித்துள்ள 5 வீரர்களை பார்ப்போம்.
ஜாக் காலிஸ் – 62 சதங்கள் :
தென்ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் இவர்இவர் ஓய்வு பெறும் முன்னர் 62 சதங்கள் விளாசி இருந்தார். இவர் ஆல்ரவுண்டர் என்பதால் 594 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச அளவில் 25 ஆயிரம் ரன்களையும் குவித்துள்ளார்.
குமார் சங்ககாரா – 63 சதங்கள் :
இலங்கை அணியின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் இவர். கடந்த இரண்டு வருடங்களும் வருடங்களுக்கு முன்னர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். தற்போது லார்ட்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் கௌரவத் தலைவராக பணியாற்றி வருகிறார். இவர் தனது காலகட்டத்தில் மொத்தம் டெஸ்ட் போட்டிகளில் 38 சதங்களும் ஒருநாள் போட்டிகளில் 25 சதங்கள் விளாசி மொத்தம் 63 சதங்கள் அடித்துள்ளார்.
ரிக்கி பாண்டிங் – 71 சங்கங்கள் :
அந்த காலகட்டத்தில் ஆக்ரோசமாக விளையாடிய வீரர் இவர்தான் சச்சின் காலத்தில் ஆடிய விராட் கோலி என்றே இவரைக் கூறலாம். 17 வருடம் விளையாடிய இவர் 26 ஆயிரம் சர்வதேச ரன்களும் ஒருநாள் போட்டிகளில் 41 சதங்களும் டெஸ்ட் போட்டிகளில் 30 சதங்கள் விளாசி இருக்கிறார் .
விராட் கோலி – 71 சதங்கள் :
இவர் இந்தியாவின் நட்சத்திர வீரர் ஆவார். தற்காலத்தின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் இவர்தான். தற்போது வரை இவர் டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து போட்டிகளிலும் சேர்ந்த 71 சதங்கள் விளாசி விட்டார். கடைசியாக இங்கிலாந்து மண்ணில் சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சச்சின் டெண்டுல்கர் – 100 சதங்கள் :
கிரிக்கெட் வரலாற்றில் மிகச் சிறந்த பேட்ஸ்மேனான இவர் 100 சதங்கள் விளாசியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 51 சதங்களும் ஒரு நாள் போட்டிகளில் 49 சதங்கள் விளாசி இருக்கிறார் இவர்.