ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக அடுத்தடுத்து 3 சதங்களை அடித்த அசத்தல் பேட்ஸ்மேன்கள் – லிஸ்ட் இதோ

Batsman

ஒருநாள் போட்டிகளில் சதம் அடிப்பது சற்று கடினமான விஷயம். ஆனால் ஒரு சில அசாத்தியமான வீரர்கள் தொடர்ந்து 3க்கும் மேற்பட்ட சதங்கள் அடித்து அசத்தியுள்ளனர். அப்படிப்பட்ட வீரர்களின் பட்டியலை தற்போது பார்ப்போம்.

Sangakkara

குமார் சங்ககாரா – 4 சதங்கள் :

இலங்கை அணியின் ஜாம்பவான் குமார் சங்கக்கார. இடதுகை ஆட்டக்காரர் 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இந்த தொடரின் போது தொடர்ச்சியாக 4 சதங்கள் விளாசி இருந்தார். வங்கதேச அணிக்கு எதிராக 105 ரன்கள், அடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிராக 117 ரன்கள் ,அடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 104 ரன்கள் ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக 124 ரன்கள் அடித்திருந்தார்.

Abbas

ஜாகீர் அப்பாஸ் – 3 சதங்கள் :

- Advertisement -

இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆவார். பாகிஸ்தானின் பேட்டிங் ஜாம்பவானாக பார்க்கப்படும் இவர் 1982 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற தொடரின் முதல் 3 ஒருநாள் போட்டிகளில் 118, 105 மற்றும் 113 என தொடர்ச்சியாக 3 சதங்கள் அடித்திருந்தார்.

abd

ஏபி டிவில்லியர்ஸ் – 3 சதங்கள் :

தென்ஆப்பிரிக்க அணியின் அதிரடி வீரர் இவர். இவர் 2010 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான முத்தரப்பு தொடரின் போது தொடர்ந்து மூன்று சதங்கள் விளாசி இருந்தார்.

Kohli-2

விராட் கோலி – 3 சதங்கள் :

சமகாலத்தில் சிறந்து விளங்கும் வகை சிறந்த பேட்ஸ்மேன் இவர். மூன்று வகையான போட்டிகளிலும் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறார். 2018 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரின் போது 140, 157, 107 என தொடர்ச்சியாக 3 சதங்கள் விளாசியுள்ளார். இதன் மூலம் இந்திய அணி அந்த தொடரை வென்றது குறிப்பிடத்தக்கது

Rohith

ரோகித் சர்மா – 3 சதங்கள் :

இந்தியாவின் துவக்க வீரரான ரோகித் சர்மா அதிரடியாக ஆடுவதில் வல்லவர். இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை தொடரில் மூன்று சதங்கள் தொடர்ச்சியாக அடித்திருந்தார். இங்கிலாந்து அணிக்காக எதிராக 102 ரன்களும், வங்கதேச அணிக்கு எதிராக 124 ரன்களும், இலங்கை அணிக்கு எதிராக 103 ரன்கள் விளாசி இருந்தார்.