அந்த 2 பேர் தான் அப்படின்னா நீங்களுமா? விராட் கோலியும் தடுமாற இதான் காரணம்.. பசித் அலி ஏமாற்றம்

Basit Ali 5
- Advertisement -

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியை சமன் செய்த இந்தியா 2வது போட்டியில் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. குறிப்பாக முதல் போட்டியில் 231 ரன்களை அடிக்க முடியாமல் வெற்றியை நழுவ விட்ட இந்தியா 2வது போட்டியில் 241 ரன்களை தொட முடியாமல் தோல்வியை சந்தித்தது. இத்தனைக்கும் அந்த 2 போட்டிகளிலுமே கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி நல்ல துவக்கத்தை கொடுத்தார்.

ஆனால் எதிர்ப்புறம் ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், சுப்மன் கில் போன்ற முக்கிய வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்கத் தவறினர். அதே போல நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலியும் தரமான இந்தியாவை வெற்றி பெற வைக்காதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. ஏனெனில் பொதுவாகவே விக்கெட்டுகள் விழுந்தால் நங்கூரமாக விளையாடக்கூடிய அவர் நேரம் செல்ல செல்ல அதிரடியாக விளையாடி வெற்றியை பெற்றுக் கொடுப்பார்.

- Advertisement -

விராட் கோலியும் இப்படியா:
குறிப்பாக சேசிங் செய்யும் போட்டிகளில் சூழ்நிலைகளை அறிந்து பேட்டிங் செய்து வெற்றிகளை பெற்றுக் கொடுப்பதில் விராட் கோலி வல்லவராக அறியப்படுகிறார். அதனாலேயே அவரை வல்லுநர்கள் சேஸ் மாஸ்டர் என்றழைக்கின்றனர். ஆனால் அப்படிப்பட்ட அவரும் முதலிரண்டு போட்டிகளில் அவுட்டாகி இந்தியாவுக்கு ஏமாற்றத்தை கொடுத்தார்.

இந்நிலையில் விராட் கோலியும் இப்படி இலங்கை மண்ணில் தடுமாறுவது தமக்கு ஆச்சரியமளிப்பதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் பசிட் அலி ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். அத்துடன் ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் போலவே ஸ்பின்னர்களை எதிர்கொள்வதற்கு முழுமையான பயிற்சி எடுத்து தயாராகாததே விராட் கோலி தடுமாறுவதற்கான காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“மகத்தான வீரரான விராட் கோலி உலகில் நம்பர் ஒன் பேட்ஸ்மேன். ஆனால் அவரும் இந்த தொடரில் 2 முறை எல்பிடபுள்யூ முறையில் அவுட்டானார். ஒருவேளை சிவம் துபே அல்லது ஸ்ரேயாஸ் ஐயர் அப்படி அவுட்டானால் அதை புரிந்து கொள்ளலாம். ஆனால் விராட் கோலி எப்போதும் விராட் கோலி தான். இருப்பினும் இப்படி அவுட்டான அவரும் பயிற்சி செய்யவில்லை என்பது தெரிகிறது. இது உலக கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணியின் இந்த பேட்டிங் வரிசை போல தெரியவில்லை”

இதையும் படிங்க: விராட், ரோஹித்தை போனா போதும் அப்றம் பாருங்க.. பாகிஸ்தான் வீரரின் கருத்தால் இந்திய ரசிகர்கள் கோபம்

“ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் பயிற்சி எடுக்காமலேயே களமிறங்கியது போல் நான் உணர்ந்தேன். இந்த வீரர்கள் போதுமான பயிற்சி இல்லாமல் வந்துள்ளார்கள்” என்று கூறினார். இதைத்தொடர்ந்து இலங்கைக்கு எதிராக ஜூலை 7ஆம் தேதி இந்தியா 3வது போட்டியில் களமிறங்குகிறது. அதில் வென்றால் மட்டுமே 27 வருடங்களுக்குப் பின் இலங்கைக்கு எதிராக ஒரு ஒருநாள் தொடரில் சந்திக்கும் தோல்வியிலிருந்து இந்தியா தப்ப முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement