- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்தியாவில் சேவாக்கிற்கு அப்றம் ரிஷப் பண்ட்கிட்ட தான் இது இருக்கு.. இதயத்தை ஜெயிச்சுடீங்க.. பசித் அலி

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் கடந்த வருடம் கார் விபத்தில் சந்தித்த காயத்திலிருந்து குணமடைந்து மீண்டும் விளையாடத் துவங்கியுள்ளார். குறிப்பாக 2024 ஐபிஎல் தொடரில் டெல்லி அணியில் விளையாடி கம்பேக் கொடுத்த அவர் டி20 உலகக் கோப்பையில் விளையாடினார். அந்த தொடரில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் இந்தியா 17 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார்.

அதைத் தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் 635 நாட்கள் கழித்து தற்போது துவங்கியுள்ள வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் ரிஷப் பண்ட் களமிறங்கியுள்ளார். அதில் சென்னையில் நடைபெறும் முதல் போட்டியில் முதல் இன்னிங்ஸில் அவர் 37 ரன்களில் அவுட்டானார். இருப்பினும் இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட் 13 பவுண்டரி 3 சிக்சருடன் சதமடித்து 109 ரன்கள் விளாசினார்.

- Advertisement -

சேவாக் போல பண்ட்:

குறிப்பாக தம்முடைய ஸ்டைலில் ஒற்றை கையில் சிக்ஸர் அடித்த அவர் வித்தியாசமாக முட்டி போட்டு பேக்வேர்ட் திசையில் பவுண்டரிகளையும் அடித்தார். அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் கம்பேக் கொடுத்த ரிஷப் பண்ட் அதிக சதங்கள் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற தோனியின் சாதனையும் சமன் செய்தார். இந்நிலையில் இந்தியாவிலேயே 2 வீரர்களின் தடுப்பாட்டம் மட்டுமே அட்டாக் செய்வது போல் இருக்கும் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் பசித் அலி தெரிவித்துள்ளார்.

அதில் ஒருவர் வீரேந்திர சேவாக் மற்றொருவர் ரிஷப் பண்ட் என்று அவர் பாராட்டியுள்ளார். அத்துடன் காயத்திலிருந்து குணமடைந்து அதிரடியாக விளையாடி கம்பேக் கொடுத்துள்ள ரிஷப் பண்ட் ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளதாகவும் பசித் அலி தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்தியாவில் 2 பேட்ஸ்மேன்கள் உள்ளனர்”

- Advertisement -

இதயங்களை வென்ற பண்ட்:

“அதில் இரண்டாவது பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட். முதல் பேட்ஸ்மேன் வீரேந்திர சேவாக். அவர்களின் தடுப்பாட்டம் கூட எதிரணியை அட்டாக் செய்வதாக இருக்கும். சேவாக் பெரும்பாலும் முதல் பந்தில் பவுண்டரிகளை அடிப்பதை வழக்கமாக வைத்திருந்தார். அவரைப் போலவே ரிஷப் பண்ட் தடுப்பாட்டமும் அட்டாக் செய்வதாக இருக்கிறது”

இதையும் படிங்க: ஷாகிப்பை மலிங்கா பெயரைச் சொல்லி கலாய்த்த விராட் கோலி.. மலிங்கா கொடுத்த ரியாக்சன்.. நடந்தது என்ன?

“அதைப் பயன்படுத்தி வங்கதேசத்துக்கு எதிராக அவர் நன்றாக விளையாடினார். அதனால் நமது இதயங்களையும் அவர் வென்றுள்ளார்” என்று கூறினார். இந்த நிலையில் சென்னை டெஸ்ட் போட்டியில் இந்தியா 515 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. அதைத் துரத்தும் வங்கதேசம் மூன்றாவது நாள் முடிவில் 158-4 ரன்கள் எடுத்து தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.

- Advertisement -