
நூற்றாண்டு தாண்டி நடைபெற்று வரும் கிரிக்கெட் விளையாட்டில் பல்வேறு தலைமுறைகளில் பல மகத்தான வீரர்கள் விளையாடியுள்ளனர். அவர்களை வைத்து சிறந்த 11 வீரர்களைக் கொண்ட கனவு அணியை பலரும் தேர்வு செய்வது வழக்கமாகும். அந்த வகையில் முன்னாள் பாகிஸ்தான் வீரர் பசித் அலி தம்முடைய சிறந்த 11 வீரர்களை கொண்ட உலக கனவு அணியை தேர்ந்தெடுத்துள்ளார்.
அந்த அணிக்கு 3 விதமான ஐசிசி வெள்ளைப்பந்து கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக உலக சாதனை படைத்த இந்தியாவின் எம்எஸ் தோனியை அவர் கேப்டனாக தேர்ந்தெடுத்துள்ளார். மேலும் முத்தையா முரளிதரனை அவர் 12வது வீரராக தேர்ந்தெடுத்துள்ளார். அவருடைய அணியில் இந்தியாவிலிருந்து வீரேந்திர சேவாக், சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.
பசித் அலி லெவன்:
இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “என்னுடைய அணியின் முதல் ஓப்பனர் வீரேந்திர சேவாக். 2வது ஓப்பனர் அலெஸ்டர் குக். 3வது இடத்தில் பிரைன் லாரா. 4வது இடத்தில் சச்சின் டெண்டுல்கர் இருக்க வேண்டுமென நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் உலகின் எந்த வகையான அணிலும் சச்சின் டெண்டுல்கர் 4வது இடத்தில் இருப்பார்”
“5வது இடத்தில் குமாரசங்காரா அல்லது விராட் கோலி ஆகியோர் இருப்பார்கள். சங்ககாரா மகத்தான செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார். எனவே அவர்களில் சிறந்தவரை நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். 6வது இடத்தில் உலகின் மகத்தான ஆல் ரவுண்டர் ஜாக் காலிஸ். அவர் சிறந்த பேட்ஸ்மேன், பவுலர் மற்றும் ஃபீல்டர். நம்பர் 7வது இடத்தில் உலக லெவன் அணியின் கேப்டனாக எம்எஸ் தோனி இருப்பார்”
“இங்கே பலரும் கில்கிறிஸ்ட்டை கீப்பராக தேர்ந்தெடுப்பார்கள். ஆனால் நான் எம்எஸ் தோனியை தேர்ந்தெடுப்பேன். என்னைப் பொறுத்த வரை கில்கிறிஸ்ட்டை விட எம்எஸ் தோனி சிறந்தவர். 8வது இடத்தில் உலகின் எந்த அணியிலும் வாசிம் அக்ரம் இருப்பார். மிகவும் ஆபத்தான 9வது இடத்தில் ஜோயல் கார்னர், நான் எதிர்கொண்ட ஆம்ப்ரோஸ், நான் பார்த்த காடிக் ஆகியோர் பொருந்தக் கூடியவர்கள்”
“ஆனால் அவர்களையும் விட மால்கம் மார்ஷல் மகத்தானவர். அவரைத் தொடர்ந்து வால்ஷ், ஆம்ப்ரோஸ் ஆகியோர் இருந்தாலும் நான் கிளன் மெக்ராத்தை தேர்ந்தெடுப்பேன். சுழல் பந்து வீச்சு துறையில் ஷேன் வார்னே 11வது இடத்திலும் முரளிதரன் டாப் ஸ்பின்னர் 12வது இடத்திலும் இருப்பார்கள்” என்று கூறினார்.
இதையும் படிங்க: எல்லார் முன்னாடியும் பாகிஸ்தானை காமெடி பீஸாக்கிட்டீங்க.. தங்கள் நாட்டு வாரியத்தை விளாசிய கம்ரான் அக்மல்
பசித் அலி ஆல் டைம் லெவன்: வீரேந்திர சேவாக், அலெஸ்டர் குக், பிரைன் லாரா, சச்சின் டெண்டுல்கர், குமார் சங்ககாரா/விராட் கோலி, ஜாக் காலிஸ், எம்எஸ் தோனி (கேப்டன்), வாஷிம் அக்ரம், மால்கோம் மார்சல், கிளன் மெக்ராத், ஷேன் வார்னே. 12வது வீரர் : முத்தையா முரளிதரன்