ரன்ஸ் அடிக்காத விராட் கோலிக்கு எதுக்கு 4வது இடம்? அந்த பையனுக்கு சான்ஸ் கொடுங்க.. பசித் அலி

Basit Ali 3
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதில் 4 போட்டிகளில் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது. அதன் காரணமாக 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இந்தியா நழுவ விட்டுள்ளது. அந்தத் தோல்விக்கு ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார்கள்.

குறிப்பாக இந்திய பேட்டிங்கின் முதுகெலும்பாக கருதப்படும் விராட் கோலி முதல் போட்டியில் சதத்தை அடித்து அசத்தினார். ஆனால் அதன் பின் தொடர்ந்து அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளில் அவுட்டாகும் அவர் இந்திய அணிக்கு பின்னடைவை கொடுத்து வருகிறார். அதனால் சச்சின் டெண்டுல்கர் போல கவர் டிரைவ் அடிக்காமல் விளையாடுங்கள் என்று சில முன்னாள் வீரர்கள் ஆலோசனை தெரிவித்தனர்.

- Advertisement -

4வது இடம் எதுக்கு:

ஆனால் அதையெல்லாம் கேட்காமல் தொடர்ந்து அதே போல அவுட்டாகும் விராட் கோலி இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்து வருகிறார். அதனால் பேசாமல் ஓய்வு பெறுங்கள் என்று அவரை இந்திய ரசிகர்களே விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் சுமாரான ஃபார்மில் இருக்கும் விராட் கோலியை எதிர்த்து பேசுவதற்கு இந்திய அணியில் யாருக்கும் தைரியம் இல்லையா? என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் பசித் அலி கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் போதுமான வாய்ப்பில் ஏமாற்றத்தை கொடுத்த விராட் கோலிக்கு பதிலாக 8வது களமிறங்கி சதத்தை அடித்த நித்திஷ் ரெட்டிக்கு நான்காவது இடத்தில் விளையாடும் வாய்ப்பை கொடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இப்போது இந்திய அணி நிதிஷ் ரெட்டியை நான்காவது இடத்தில் விளையாட கொண்டு வர வேண்டும்”

- Advertisement -

டிராவிட் மிஸ்:

“விராட் கோலி ஐந்தாவது இடத்தில் விளையாட வேண்டும். ஏனெனில் அவரால் நான்காவது இடத்தில் ரன்கள் அடிக்க முடியவில்லை. அவர் தொடர்ந்து ஒரே மாதிரியாக அவுட்டாகிறார். அப்படி ஒருவேளை நீங்கள் ரன்கள் அடிக்கவில்லையெனில் லோயர் ஆர்டரில் விளையாடலாம். ரோகித் சர்மா அதை செய்தார். ஆனால் விராட் கோலியை பற்றி யாரும் சிந்திப்பதில்லை”

இதையும் படிங்க: 2 ஸ்பெஷல் தொடர்கள் உட்பட.. 2025 புத்தாண்டில் இந்திய அணி விளையாடும் முழு அட்டவணை இதோ

“ஏனெனில் அனைவரும் பயந்துள்ளார்கள். அதே போல முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டை இந்திய அணி மிஸ் செய்கிறார்கள்” என்று நினைக்கிறேன். இதைத் தொடர்ந்து கடைசி போட்டியிலாவது வெற்றி பெற்று இந்தத் தொடரை இந்தியா சமன் செய்யுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது. அப்போட்டி சிட்னியில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement