வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2 – 0 (2) என்ற கணக்கில் இந்தியா வென்றது. குறிப்பாக கான்பூரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் 2, 3வது நாள் ஆட்டங்கள் மழையால் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. அதனால் டிராவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்தப் போட்டியில் கடைசி 2 நாட்களில் வங்கதேசத்தை அடித்து நொறுக்கிய இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
அதனால் சமீபத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியதைப் போல வெல்வோம் என்று சவால் விட்ட வங்கதேசத்தை தோற்கடித்த இந்தியா சொந்த மண்ணில் தங்களை வலுவான அணி என்பதை நிரூபித்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானை போல் இந்திய அணியை வீழ்த்தலாம் என்று வங்கதேச கேப்டன் நஜ்முல் சாண்டோ நினைத்ததாக பசித் அலி கூறியுள்ளார். ஆனால் இந்தியா கடைசி 2 நாட்களில் வங்கதேசத்தை தோற்கடித்ததாக அவர் பாராட்டியுள்ளார்.
பாகிஸ்தான் கிடையாது:
அத்துடன் இனிமேல் இந்தியாவின் பரம எதிரி பாகிஸ்தான் கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார். மாறாக ஆஸ்திரேலியா தான் உண்மையாக இந்தியாவின் பரம எதிரி என்று தெரிவிக்கும் முன்னாள் பாகிஸ்தான் வீரரான அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இந்தியாவை 2 – 0 என்ற கணக்கில் வங்கதேசம் தோற்கடிக்கும் என்று சாண்டோ கூறினார். ஒருவேளை அவர்கள் மீண்டும் பாகிஸ்தானை ஏற்றுக்கொள்ளப் போகிறோம் என்று நினைத்திருக்கலாம்”
“பாகிஸ்தானுக்கு எதிராக வங்கதேசம் விளையாடிய போட்டிகள் கடைசி நாட்கள் வரை சென்றது என்பதை சொல்வது வலிக்கிறது ஆனால் இந்தியா 2 நாட்களில் முடித்தது. அது தான் இந்தியாவ- பாகிஸ்தானுக்கு இடையேயான வித்தியாசமாகும். இந்த நிதர்சனத்தை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதையும் தாண்டி பாகிஸ்தான் சிறந்த கிரிக்கெட்டை விளையாடுவதாக நினைத்தால் அது வீண்”
மிரட்டிய இந்தியா:
“இந்தியாவின் போட்டி ஆஸ்திரேலியா மட்டுமே. ஏனெனில் இந்தியா சொந்த மண்ணிலேயே 19 – 20 தொடர்களை வென்றுள்ளனர். 4வது நாளில் ரோஹித் சர்மா – ஜெய்ஸ்வால் ஆகியோரின் ஓபனிங் பார்ட்னர்ஷிப் திருப்பு முனையாக அமைந்தது. 5வது நாளில் முதல் மணி நேரத்தில் விக்கெட் விடாத காரணத்தால் வங்கதேச பேட்ஸ்மேன்கள் ரிலாக்ஸாக விளையாடினர்”
இதையும் படிங்க: இதை செய்யாத பாபர் அசாம் கோலியுடன் ஒப்பிட தகுதியற்றவர்.. இதான் இந்தியாவின் லெவல்.. ஜஹீர் அப்பாஸ்
“குறிப்பாக சாண்டோ ரிவர்ஸ் ஷாட்டை அடித்து அவுட்டானார். சாத்மன் இஸ்லாம் 50 ரன்கள் இழந்தது முக்கியமான விக்கட்டை இழந்தார். அங்கே தான் வங்கதேசத்தின் சரிவு ஏற்பட்டது. அவர்கள் போராடியிருந்தால் போட்டியை ட்ரா செய்திருக்கலாம். ரோஹித் சர்மாவின் கேப்டன்ஷிப் டாப் க்ளாஸ்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இந்தியா டி20 தொடரில் வங்கதேசத்தை சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.



