இதை செய்யாத பாபர் அசாம் கோலியுடன் ஒப்பிட தகுதியற்றவர்.. இதான் இந்தியாவின் லெவல்.. ஜஹீர் அப்பாஸ்

Zaheer Abbas
- Advertisement -

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம் 2019 காலகட்டங்களில் ஓரளவு நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தினார். அதனால் விராட் கோலியை விட பாபர் அசாம் தான் சிறந்தவர் என்று பாகிஸ்தானை சேர்ந்த பல முன்னாள் வீரர்கள் பாராட்டினர். அந்த நிலையில் 2022 டி20 உலகக் கோப்பையில் முதல் முறையாக ஜிம்பாப்வே அணியிடம் அவருடைய தலைமையில் பாகிஸ்தான் தோற்றது.

அதன் பின் 2023 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானிடம் முதல் முறையாக பாகிஸ்தான் அவமானத் தோல்வியை சந்தித்தது. இதற்கிடையே 2023 ஆசிய மற்றும் உலகக் கோப்பைகளில் இந்திய அணியிடம் பாகிஸ்தான் படுதோல்விகளை சந்தித்தது. அதற்கு பொறுப்பேற்று கேப்டன்ஷிப் பதவியிலிருந்து விலகிய பாபர் அசாம் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

- Advertisement -

கம்பேர் பண்ணாதீங்க:

ஆனால் அப்போதும் முன்னேற்றத்தை சந்திக்காத பாகிஸ்தான் 20204 டி20 உலகக் கோப்பையில் பாபர் அசாம் தலைமையில் கத்துக்குட்டி அமெரிக்காவிடம் சூப்பர் ஓவரில் தோற்றது. அதற்கு பொறுப்பேற்று மீண்டும் அவர் தற்போது கேப்டன்ஷிப் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் பெரிய ரன்கள் அடிக்காத பாபர் அசாம் இந்தியாவுடன் விராட் கோலியுடன் ஒப்பிட தகுதியற்றவர் என பாகிஸ்தான் ஜாம்பவான் வீரர் ஜஹீர் அப்பாஸ் விமர்சித்துள்ளார்.

மேலும் வங்கதேசத்திடம் சொந்த மண்ணிலேயே பாகிஸ்தான் தோற்ற நிலையில் சமநிலையை கொண்டுள்ள இந்திய அணி கடலில் கப்பல் போல் சமூகமாக பயணிப்பதாக அவர் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்த ஒப்பீடுகள் அர்த்தமற்றது. விராட் கோலி ஒவ்வொரு போட்டியிலும் ரன்கள் அடிக்கிறார். ஆனால் பாபர் அசாம் எந்தப் போட்டியிலும் அடிப்பதில்லை”

- Advertisement -

சமநிலையில் இந்திய அணி:

“பின்னர் எப்படி உங்களால் ஒப்பிட முடியும்? ரன்கள் அடிக்கும் வீரர் தான் சிறந்தவர். அவர் அசாம் பாகிஸ்தான் அணியிலிருந்து நீக்கப்பட வேண்டும். நம்முடைய முதன்மை பேட்ஸ்மேனான அவர் சுமாரான ஃபார்மில் ரன்கள் அடிக்கவில்லையெனில் அணியிலிருந்து நீக்கப்பட வேண்டும். இந்திய அணி ஒட்டுமொத்தமாக நன்றாக இருக்கிறது”

இதையும் படிங்க: இந்தியாவை 12 வருஷமா யாராலும் அசைக்க முடியலனா அதுக்கு அவங்க 2 பேர் தான் காரணம் – ஆகாஷ் சோப்ரா

“அவர்களின் பேட்ஸ்மேன்கள் நன்றாக விளையாடுகின்றனர். பவுலர்கள் வலுவாக உள்ளனர். எனவே சமநிலையுடன் இருக்கும் அவர்கள் புரிந்து விளையாடுகின்றனர். அவர்களிடம் கேப்டன் கிரிக்கெட்டை நன்றாக புரிந்த கேப்டன் உள்ளார். அப்படி எல்லாம் உங்களுக்கு சாதகமாக இருக்கும் போது அது சுமூகமான பயணமாக இருக்கும். அந்த நிலையில் தான் தற்போது இந்தியா இருக்கிறது” என்று கூறினார்.

Advertisement