இந்தியாவை பாகிஸ்தான் ஜெயிச்சா தான் எனக்கு ஆச்சர்யம்.. இந்த காரணத்தால் இம்முறை டிவி உடையாது.. பசித் அலி

Basit Ali
- Advertisement -

Basit ali on ind vs pak champions trophy 2025 game

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்காக ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அதில் தங்களது முதல் போட்டியில் நியூசிலாந்திடம் தோற்ற நடப்புச் சாம்பியன் பாகிஸ்தான் செமி ஃபைனல் செல்ல இந்தியாவுக்கு எதிராக வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது. மறுபுறம் வங்கதேசத்தை வீழ்த்திய இந்திய அணி பாகிஸ்தானின் தோற்கடித்து செமி ஃபைனல் செல்ல தயாராக உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்தப் போட்டியில் இந்திய அணியை பாகிஸ்தான் தோற்கடித்தால் தான் தமக்கு ஆச்சரியம் என்று அந்நாட்டின் முன்னாள் வீரர் பசித் அலி தெரிவித்துள்ளார். மேலும் இந்தத் தொடரை நடத்துவதற்காக மைதானத்தை புதுப்பிப்பதற்கு செலவிட்ட தொகையை பாகிஸ்தான் வாரியம் தங்களுடைய அணியை உருவாக்குவதில் செலவிட்டிருக்கலாம் என்று அவர் சாடியுள்ளார். ஏனெனில் பாகிஸ்தான் கிரிக்கெட் தற்போது அடிமட்டத்தில் திண்டாடுவதாக அவர் கவலை தெரிவித்துள்ளார்.

டிவி உடையாது:

இது பற்றி பசித் அலி பேசியது பின்வருமாறு. “இந்தியாவுக்கு எதிரான போட்டி பாகிஸ்தானுக்கு ஃபைனல் போன்றது. அதில் இந்தியா அதிகம் வெல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை பாகிஸ்தான் வென்றால் அது தான் எனக்கு ஏமாற்றமாக இருக்கும். ஏனெனில் என்னுடைய பார்வையில் பாகிஸ்தான் மிகவும் அடிமட்டத்திற்கு சென்றுள்ளது. இம்முறை பாகிஸ்தான் தோற்றால் எங்களுடைய ரசிகர்கள் தொலைக்காட்சியையும் உடைக்க மாட்டார்கள்”

- Advertisement -

“ஏனெனில் எங்களுடைய நாட்டின் பொருளாதார நிலைமை அப்படி இருக்கிறது. பஃகார் ஜமான் காயத்தால் விலகியுள்ள நிலையில் மூன்றாவது இடத்தில் யார் பேட்டிங் செய்வார் என்பது யாருக்கும் தெரியாது. அவர்கள் 3வது இடத்தில் பாபர் அசாமை விளையாட வைத்து உஸ்மான் கான் – இமாம் ஆகியோரை ஓபனிங் களமிறக்கலாம். ஜமான் காயத்தால் வெளியேறியதால் பாகிஸ்தானின் பேட்டிங் ஒரே மாதிரியாக இருக்கிறது என்பதே உண்மை”

அடிமட்டத்தில் பாகிஸ்தான்:

“அதாவது 3வது கியரில் நமது பேட்டிங் துவங்கினால் அப்படியே இருக்கிறது. அது சூழ்நிலைக்குத் தந்தார் போல் மாறுவதில்லை. பாகிஸ்தான் தற்போது தங்களுடைய பேட்டை பேச வைத்து மூளையை பயன்படுத்த வேண்டும். விராட் கோலி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அசத்துவதற்காக காத்திருக்கிறார். இந்தத் தொடருக்காக மைதானங்களை புதுப்பிக்க நாம் செலவிட்ட தொகையில் பாதியை வைத்து நல்ல அணியை உருவாக்கி இருக்கலாம்”

இதையும் படிங்க: 2 பேரும் மேட்ச் வின்னர்ஸ்.. ஃபார்மில் இருந்தா அவர் பாகிஸ்தானை 60 பந்தில் நொறுக்கி சதமடிப்பாரு.. யுவ்ராஜ் பேட்டி

“ஆனால் நல்ல அணியை உருவாக்குவதற்கு முதலில் உங்களுக்கு அறிவு தேவை. அதில் உங்களுடைய வருங்கால பார்வை என்ன? சிந்தனை என்ன? வீரர்களுக்கு நீங்கள் எப்படி நீண்ட காலம் திறமையை அறிந்து வாய்ப்பு வழங்குவீர்கள் என்பது போன்றவை அடங்கும்” எனக் கூறினார். இதைத்தொடர்ந்து பிப்ரவரி 22ஆம் தேதி துபாயில் இந்தியா – பாகிஸ்தான் மோதுகின்றன.

Advertisement