- Advertisement -
டி20

இதுவே விராட் கோலி கேட்ருந்தா.. ஸ்மித்தின் அப்பா கூட அதை மறுத்திருக்க மாட்டாரு.. பசித் அலி ஓப்பன்டாக்

ஆஸ்திரேலியாவில் பிக்பேஷ் 2025/26 கிரிக்கெட் தொடரில் சில தினங்களுக்கு முன் சிட்னியில் 37வது போட்டி நடைபெற்றது. அதில் சிட்னி தண்டர் அணியை சிட்னி சிக்ஸர் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அப்போட்டியில் முதலில் விளையாடிய சிட்னி தண்டர் அணி கேப்டன் டேவிட் வார்னர் 110* (65) ரன்கள் குவித்த உதவியுடன் 190 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அதைத் துரத்திய சிட்னி சிக்ஸர்ஸ் 17.2 ஓவரிலேயே 191/5 ரன்களை எடுத்து எளிதாக வென்றது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 100 (42), பாபர் அசாம் 47 (39) ரன்கள் எடுத்தனர். முன்னதாக அத்தொடரில் சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்காக முதல் முறையாக பாகிஸ்தானை சேர்ந்த பாபர் அசாம் விளையாடி வருகிறார்.

- Advertisement -

அவமானப்பட்ட பாபர்:

அந்த வாய்ப்பில் பெரும்பாலான போட்டிகளில் டெஸ்ட் போல ஆமைவேக ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் சொற்ப ரன்னில் அவுட்டானார். மற்ற போட்டிகளிலும் 120 – 130 என்ற தடவலான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடிய அவர் இப்போட்டியிலும் மெதுவான ஆட்டத்தை விளையாடினார். அந்த சூழ்நிலையில் பிக்பேஷ் தொடரில் 12வது ஓவருக்கு பவர்சர்ஜ் என்ற சிறப்பம்சம் இருக்கிறது.

அதைப் பயன்படுத்துவதற்காக 11வது ஓவரின் கடைசி பந்தில் சிங்கிள் எடுப்பதற்கான வாய்ப்பு கிடைத்தும் ஸ்மித் எடுக்கவில்லை. குறிப்பாக பாபர் அசாமால் 12வது ஓவரில் அதிரடியாக விளையாட முடியாது என்று நினைத்த அவர் ஸ்ட்ரைக்கை கொடுக்கவில்லை. அதற்காக பாபர் அசாம் அதிருப்தியை வெளிப்படுத்திய நிலையில் ரியன் ஹாட்லி வீசிய 12வது ஓவரில் 6, 6, 6, 6, 4, 2 என 32 ரன்கள் குவித்த ஸ்மித் தம்முடைய முடிவை சரியென்று நிரூபித்தார்.

- Advertisement -

பசித் அலி வெளிப்படை:

மறுபுறம் அதற்காக மகிழ்ச்சியடையாத பாபர் அசாம் அடுத்த ஓரியிலேயே கிளீன் போல்ட்டானார். அந்த கோபத்தில் பெவிலியன் செல்வதற்கு முன் அவர் பவுண்டரி எல்லையை பேட்டால் அடித்து விட்டுச் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் அந்த இடத்தில் பாபருக்கு பதில் விராட் கோலி இருந்திருந்தால் ஸ்டீவ் ஸ்மித்தின் அப்பா கூட ஸ்ட்ரைக்கை கொடுக்க மறுப்பு தெரிவித்திருக்க மாட்டார் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் பசித் அலி தெரிவித்துள்ளார்.

அதுவே பாபர் – கோலி ஆகியோருக்கிடையே இருக்கும் தரம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ஸ்மித் தன்னுடைய முடிவை அடுத்த ஓவரில் நிரூபித்துக் காட்டினார். அவருடைய ஆட்டத்தைப் பார்த்த நான் ஒரு கட்டத்தில் 6 சிக்ஸர்கள் அடிப்பார் என்று நினைத்தேன். ஒருவேளை பாபர் அசாம் போல விராட் கோலி சிங்கிள் எடுக்க விரும்பியிருந்தால், அதை ஸ்டீவ் ஸ்மித்தின் அப்பா கூட எடுத்திருப்பார்”

இதையும் படிங்க: மகளிர் ஐபிஎல்: 96 ரன்ஸ்.. புதிய சாதனை படைத்த மந்தனா.. டெல்லியை சாய்த்த ஆர்சிபி 4க்கு 4 வெற்றி

“நீங்கள் விளையாட்டில் உங்களுடைய சொந்த மதிப்பை கொண்டு வர வேண்டும். இதனால் பாகிஸ்தானின் பெயர் கறைப்படவில்லை. அப்படி சொல்பவர்கள் முட்டாள்கள். பிக்பேஷ் தொடரில் விளையாட பாபர் அழைக்கப்பட்டதாலேயே சென்றார். ஆனால் பாகிஸ்தான் வாரியம் அவரை ஆஸ்திரேலியாவுக்கு விளையாட அனுப்பவில்லை” என்று கூறினார்.

- Advertisement -