மெசேஜ் பண்றாங்க.. ஆனா சச்சின் சாதனையை ரூட் உடைக்க முடியாது.. காரணம் இது தான்.. பசித் அலி

Basit Ali 88
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கரின் அதிக டெஸ்ட் ரன்கள் சாதனையை ஜோ ரூட் உடைப்பார் என்ற கருத்துக்கள் காணப்படுகின்றன. இங்கிலாந்தை சேர்ந்த அவர் கடந்த 2011 முதல் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறார். அதில் இதுவரை 143 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 12027* ரன்களை 50.11 என்ற சராசரியில் குவித்து வருகிறார்.

குறிப்பாக நவீன கிரிக்கெட்டில் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன் ஆகியோரை முந்திக்கொண்ட ரூட் முதலாவதாக 10000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். அத்துடன் தற்போது 33 வயது மட்டுமே நிரம்பியுள்ள அவர் இன்னும் 3 – 4 வருடங்கள் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம் ஜாம்பவான் சச்சின் தன்னுடைய 24 வருட டெஸ்ட் கேரியரில் 200 போட்டிகளில் 15,921 ரன்களை குவித்துள்ளார்.

- Advertisement -

வாய்ப்பு இல்லை:
எனவே இன்னும் 3 – 4 வருடங்களில் சராசரியாக 1000 ரன்கள் அடித்து சச்சினை முந்தி ஜோ ரூட் புதிய உலக சாதனை படைப்பார் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் சமீபத்தில் தெரிவித்திருந்தார். மேலும் இதே பசியுடன் விளையாடினால் சச்சினை முந்தி ஜோ ரூட் உலக சாதனை படைக்க வாய்ப்புள்ளதாக ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான் கேப்டன் ரிக்கி பாண்டிங் சமீபத்தில் கூறியிருந்தார்.

இந்நிலையில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ஜோ ரூட் உடைக்க வாய்ப்பில்லை என முன்னாள் பாகிஸ்தான் வீரர் பசித் அலி தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதற்கான காரணம் பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ஜோ ரூட் உடைப்பார் என்று எனக்கு பலரும் மெசேஜ் செய்கிறார்கள். இருப்பினும் கடினமான அந்த சாதனை உடைக்கப்படாது என்று நான் கருதுகிறேன்”

- Advertisement -

“ஏனெனில் அந்த 2 பேட்ஸ்மேன்களிடம் வித்தியாசமான கிளாஸ் இருக்கிறது. குறிப்பாக சச்சின் டெண்டுல்கர் என்று நீங்கள் அழைப்பவரை யாரும் பொருத்த முடியாது. அதை மீண்டும் சொல்வேன். கொஞ்சம் உயரம் குறைந்தவரான சச்சின் உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மேலே நின்று நேராக டிரைவ் அடிப்பார்”

இதையும் படிங்க: கபில் தேவ் கேப்டன், தோனி துணை கேப்டன்.. தனது ஆல் டைம் தரமான இந்திய அணியை வெளியிட்ட பசித் அலி

“அது போன்ற ஆட்டத்தை மற்றவர்களிடம் நான் பார்த்ததில்லை. சொல்லப்போனால் சச்சின் போல சுனில் கவாஸ்கர் கூட ஸ்ட்ரைட் டிரைவ் அடிக்க மாட்டார். மிகவும் எடையை கொண்ட பேட்டை பயன்படுத்தி விளையாடிய சச்சினுக்கு எதிராக விளையாட நான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். அவர் எப்படி எப்படி தயாராகி விளையாடுவார் என்பதை நான் பார்த்துள்ளேன். அது டாப் கிளாஸாக இருக்கும்” என்று கூறினார்.

Advertisement