கோலியின் பலவீனத்தை.. ரவி சாஸ்திரி மாதிரி கம்பீரால் சரிசெய்ய முடியல.. பரத் அருண் அதிருப்தியுடன் ஆலோசனை

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் 10,000 ரன்கள் நெருங்கியுள்ளார். அத்துடன் மொத்தமாக 81 சதங்கள் அடித்துள்ள அவர் நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவானாக அறியப்படுகிறார். ஆனால் அப்படிப்பட்ட அவரை டெஸ்ட் போட்டிகளில் எதிரணிகள் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பகுதியில் பந்து வீசி தொடர்ச்சியாக அவுட்டாக்கி வருவது உலகளவில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில் 2014 இங்கிலாந்து தொடரில் அந்த பலவீனத்தை கொண்டிருந்த விராட் கோலி பின்னர் முன்னேற்றமடைந்து அசத்தினார். ஆனால் 2021 தென்னாப்பிரிக்க தொடரிலிருந்து மீண்டும் அந்தப் பகுதிகளில் வீசப்படும் பந்துகளை கவர் டிரைவ் அடிக்க ஆசைப்படும் அவர் தனது விக்கெட்டை எதிரணிக்கு பரிசாக கொடுத்து வருகிறார். அதன் பயனாக இந்திய அணி சமீபத்தில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

சாஸ்திரியின் அட்வைஸ்:

அதனால் விராட் கோலியின் பலவீனத்தை சரி செய்ய முடியாத அளவுக்கு பயிற்சியாளர் கௌதம் கம்பீர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? என சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் விமர்சித்துள்ளார்கள். இந்நிலையில் விராட் கோலியின் இந்த பலவீனத்தை ரவி சாஸ்திரி போல கௌதம் கம்பீர், அபிஷேக் நாயரால் சரி செய்ய முடியவில்லை என முன்னாள் இந்திய பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் 2014 காலங்களில் ரவி சாஸ்திரி தலைமையிலான பயிற்சியாளர் குழு விராட் கோலியின் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் லைன் பிரச்சனையை சரி செய்தது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நீங்கள் பரிந்துரை செய்யும் போது உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனான விராட் உங்களிடம் கேள்விகளை கேட்பார். குறிப்பாக நீங்கள் எதை வைத்து இதை சொல்கிறீர்கள்? நான் என்ன தவறு செய்கிறேன்? இதே வகையில் ரன்கள் அடித்த போது ஏன் இதை சொல்லவில்லை? என்று கேட்பார்”

- Advertisement -

எளிமையான தீர்வு:

“அப்போது இங்கிலாந்தில் ஸ்விங் ஆகும் சூழ்நிலைகளில் நீங்கள் லெக் ஸ்டம்ப்பில் நிற்கக்கூடாது. மிடில் ஸ்டம்ப் பகுதியில் நின்று வெள்ளைக் கோட்டுக்கு வெளியே வந்து விளையாடுங்கள். களத்தில் இருக்கும் வரை நீங்கள் தான் வெள்ளை கோட்டுக்கான உரிமையாளர் என்று விராட் கோலியிடம் ரவி சாஸ்திரி சொன்னார். அதைப் பின்பற்றிய விராட் கோலி ஆஸ்திரேலியாவில் 4 சதங்கள் அடித்தார்”

இதையும் படிங்க: டி20யில் அசத்தும் கம்பீர்.. டிராவிட் இடத்தில் இதை செய்யலன்னா டெஸ்ட் ஃபார்மட் ரொம்ப கஷ்டம்.. டிகே பேட்டி

“இதை விராட் கோலியிடம் நீங்கள் சொல்வதற்கு ரவி சாஸ்திரியைப் போன்ற நட்சத்திர அந்தஸ்தும் தன்னம்பிக்கையும் வேண்டும். அந்தத் தகுதிகள் தற்போதைய இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவில் இல்லை என்று நான் நினைக்கிறேன்” எனக் கூறினார். அடுத்ததாக இங்கிலாந்து மண்ணில் நடைபெறும் டெஸ்ட் தொடரிலாவது விராட் கோலி முன்னேறுவாரா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

Advertisement