எனக்கு சுயமரியாதை தான் முக்கியம். இனிமே இந்த பொழப்பே வேணாம் – பணியில் இருந்து விலகிய அம்பயர்

- Advertisement -

ஜென்டில்மேன் கேம் என அழைக்கப்படும் கிரிக்கெட்டில் தங்களது அதிகப்பிரசங்கி தனத்தையும், அருவருக்கத்தக்க செயல்களையும் வெளிப்படுத்தி அனைத்து நாட்டு கிரிக்கெட் ரசிகர்களின் விமர்ச்சனத்திற்கு உள்ளாகி வருவதே பங்களாதேஷ் அணியில் இடம்பிடித்திருக்கும் வீரர்களின் வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையில் அந்நாட்டு நடுவர்களில் ஒருவரான மோனிருஸ்சமான் அந்த பணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் இதற்கு அந்நாட்டு கிரிக்கெட் அணியில் இடம்பிடித்திருக்கும் இரு முன்னனி வீரர்களின் அருவருக்கத்தக்க செயல்கள்தான் காரணம் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

shakib 1

- Advertisement -

பங்களாதேஷின் உள்ளூர் தொடரான டாக்கா ப்ரீமியர் லீக் நடைபெற்று முடிந்துள்ளது. இத்தொடரின் ஒரு போட்டியின்போது கள நடுவர் விக்கெட் கொடுக்காததால், ஸ்டம்புகளை தனது காலால் எட்டி உதைத்து அதிர்ச்சியை ஏற்படுத்திய ஷாகிப் அல் ஹசான், அந்த போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்த போது மழை வந்தவுடன் அனைத்து ஸ்டம்புகளையும் பிடுங்கி வீசி எறிந்ததும் பெரிதும் விமர்ச்சனத்திற்கு உள்ளாகி இருந்தது. அதனையடுத்து அவருக்கு அந்நாட்டு நாணய மதிப்பில் 5 இலட்சம் அபாரதமும், 3 போட்டிகளில் விளையாட தடையும் விதிக்கப்பட்டது.

அதே தொடரின் மற்றொரு போட்டியில் கள நடுவர் விக்கெட் கொடுக்காததால் பிட்சிலேயே படுத்து உருண்ட மற்றொரு வீரரான மஹமதுல்லா, அந்த போட்டியை மேற்கொண்டு நடத்த விடாமல் பிட்சிலேயே படுத்துக்கொண்டார். இதனால் அவருக்கு 20,000 அபரதமாக விதிக்கப்பட்டது. இந்த இருவரின் செயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட மோனிருஸ்சமான், மன உளைச்சல் காரணமாக நடுவர் பணியில் இருந்து வாழ்நாள் முழவதுமாக விலகும் முடிவை எடுத்துள்ளார். இது பற்றி கூறிய அவர்,

shakib 3

இனிமேல் நான் எந்த போட்டிகளிலும் நடுவராக பணியாற்ற போவதில்லை. எனக்கென்று சுய மரியாதைகள் இருக்கின்றது. அதைவிட்டுவிட்டு இப்படி என்னால் வாழ இயலாது. நடுவர்கள் தவறு செய்தனர். அதை இல்லையென்று கூறவில்லை. ஆனால் அதற்காக அவர்களை இப்படி அசிங்கப்படுத்துவதை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த வீரர்கள் அப்படி நடந்து கொண்ட பிறகும் இந்த பணியை தொடர்ந்து செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை. பணத்திற்காகவெல்லாம் என்னுடைய சுயமரியாதையை இழக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

um

நடுவர்களை கொச்சைப்படுத்திய ஷாகிப் மற்றும் மஹமதுல்லா ஆகியோரின் செயல்கள் பெரிய அளவில் பேசப்பட்டது. எனவே அவர்களுக்கு சர்வதேச தடை இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் உள்ளூர் போட்டிகளில் விளையாட தடை மற்றும் அபராதம் ஆகியவற்றை மட்டுமே அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement