இந்தியா பங்களாதேஷ் தொடருக்கான புதிய கேப்டன் அறிவிப்பு – விவரம் இதோ

Ban
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரை முடித்து அடுத்த தொடருக் காக தயாராகி வருகிறது. அடுத்ததாக வங்கதேச அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.

mohamadulla

- Advertisement -

இந்த தொடருக்கான பங்களாதேஷ் அணியின் டி20 மற்றும் டெஸ்ட் கேப்டனாக இருந்த ஷாகிப் அல் ஹசன் நேற்று ஐசிசி-யால் சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டதால் அணியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் காரணமாக தற்போது இந்த அணிக்கு புதிய கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி டி20 போட்டிகளுக்கு இளம் வீரரான முஹமதுல்லாவும், டெஸ்ட் கேப்டனாக மொமினுள் ஹக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர். பங்களாதேஷ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான ஷாகிப்பின் இழப்பு அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும்.

mominul

வழக்கமாகவே இந்திய அணிக்கு எதிராக பங்களாதேஷ் அணி திணறும். இம்முறை கத்துக்குட்டி வங்கதேச அணி எந்த அளவுக்கு தாக்குப்பிடிக்கும் என்பதும் கவலைக்குரிய ஒன்றுதான். அதுவும் டெஸ்ட் போட்டிகளில் உலகின் முன்னணி அணிகளையே புரட்டி எடுக்கும் இந்திய அணி பங்களாதேஷ் அணி சின்னாபின்னம் செய்யும் என்பது மறுக்கமுடியாத உண்மை.

Advertisement