ஐபிஎல் 2026 தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் வங்கதேசத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசூர் ரஹ்மானை 9.20 கோடிகளுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியது. ஆனால் விரைவில் ரஹ்மானை அணியிலிருந்து விடுவியுங்கள் என்று நேற்று கொல்கத்தா நிர்வாகத்திற்கு பிசிசிஐ கெடு விதித்தது. அதாவது சமீபத்தில் வங்கதேசத்தில் சில ஹிந்து மக்கள் தாக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது.
அந்த தாக்குதலில் சில அப்பாவி மக்கள் இயற்கை எய்தியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. அதற்கு இந்தியாவை சேர்ந்த அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அத்துடன் வங்கதேசத்தை சேர்ந்த ரஹ்மான் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் விளையாடக்கூடாது என்று ஆளுங்கட்சியை சேர்ந்த அரசியல்வாதிகள் எச்சரிக்கை விடுத்தார்கள்.
மோதி பாக்கலாம்:
எனவே அசம்பாவிதங்களைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரை அணியிலிருந்து விடுவிக்குமாறு கொல்கத்தாவை பிசிசிஐ கேட்டுக் கொண்டது. அதை உடனடியாக ஏற்றுக்கொண்ட கொல்கத்தா நிர்வாகமும் முஸ்தபிசூர் ரஹ்மானை தங்களது அணியிலிருந்து விடுவிப்பதாக அறிவித்தது. அவருக்கு பதிலான மாற்று வீரரை விரைவில் அறிவிப்போம் என்றும் கொல்கத்தா அணி நிர்வாகம் தெரிவித்தது.
ஆனால் அந்த அறிவிப்பு வங்கதேச ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. அதனால் இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெறும் 2026 டி20 உலகக் கோப்பையில் வங்கதேசம் விளையாடக்கூடாது என்று அந்நாட்டு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு அலையை உருவாக்கியுள்ளனர். அப்படியே நடந்தாலும் அதை தங்களுடைய நாட்டில் தொலைக்காட்சியில் பார்க்கக்கூடாது என்றும் வங்கதேச ரசிகர்கள் தங்களுக்கு தாங்களே உறுதிக் கொண்டுள்ளார்கள்.
ஆப்பை உருவாகும் வங்கதேசம்:
இந்நிலையில் தங்கள் நாட்டு வீரரை ஐபிஎல் தொடரிலிருந்து கழற்றி விட்ட இந்தியாவுடன் மோதிப் பார்க்க வங்கதேசம் தயாராகியுள்ளது. அதற்காக ஐசிசி 2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு சென்று வங்கதேச கிரிக்கெட் அணி விளையாடாது என்ற முடிவை அந்நாட்டு வாரியம் கையிலெடுத்துள்ளது. மேலும் தங்களுடைய போட்டிகளை இந்தியாவுக்கு பதில் இலங்கையில் நடத்துமாறு ஐசிசியிடம் வங்கதேச வாரியம் கோரிக்கை வைத்துள்ளது.
இதையும் படிங்க: அவங்க இப்படி பண்ணா என்னால என்ன பண்ண முடியும்.. கே.கே.ஆர் அணி நீக்கத்திற்கு பிறகு – வங்கதேச வீரர் வருத்தம்
அதை வங்கதேச அரசின் விளையாட்டுத்துறை ஆலோசகர் ஆசிப் நஸ்ருல் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிவிப்பாக வெளியிட்டுள்ளார். இந்தியாவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அவர் இந்தியாவில் விளையாட வங்கதேச அணிக்கு பாதுகாப்பில்லை என்று கூறியுள்ளார். எனவே தங்கள் நாட்டைச் சேர்ந்த ஒரு வீரரை விளையாட அனுமதிக்காத இந்தியாவில் தங்களுடைய மொத்த அணியும் விளையாடாது என்று அவர் கூறியுள்ளார். அத்துடன் அடிமைக்கலாம் முடிந்து விட்டதால் ஐபிஎல் போட்டிகளை வங்கதேசத்தில் ஒளிபரப்பக்கூடாது என்றும் அவர் வங்கதேச ஒளிபரப்பு துறையை கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



