5/3 இந்தியாவுக்கு செஞ்சதை அனுபவித்த நியூஸிலாந்து.. வங்கதேசம் மாபெரும் வரலாற்று சாதனை வெற்றி

NZ vs BAN t20 2
- Advertisement -

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அங்கு முதலாவதாக நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 2 – 1 (3) என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. கேன் வில்லியம்சன் போன்ற முதன்மை வீரர்கள் இல்லாமலேயே அத்தொடரில் சிறப்பாக விளையாடிய நியூஸிலாந்து தங்களுடைய சொந்த மண்ணில் கோப்பையை வென்று அசத்தியது. ஆனாலும் கடைசி போட்டியில் வென்ற வங்கதேசம் ஒருநாள் கிரிக்கெட்டின் வரலாற்றில் நியூசிலாந்து மண்ணில் முதல் முறையாக ஒரு வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தது.

அதைத்தொடர்ந்து 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராக இவ்விரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் மோதுகின்றன. அத்தொடரின் முதல் போட்டி டிசம்பர் 27ஆம் தேதி நேப்பியர் நகரில் இந்திய நேரப்படி முற்பகல் 11.40 மணிக்கு துவங்கியது. அதில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

- Advertisement -

சாதனை வெற்றி:
அதை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்துக்கு டிம் சைபர்ட் முதல் ஓவரிலேயே டக் அவுட்டானார். அடுத்த ஓவரில் ஃபின் ஆலனை 1 ரன்னில் அவுட்டாக்கிய மெஹதி ஹசன் அடுத்ததாக வந்த கிளன் பிலிப்ஸை கோல்டன் டக் அவுட்டாக்கி மிரட்டினார். அதனால் 5/3 என்ற படுமோசமான துவக்கத்தை பெற்ற நியூசிலாந்து ஆரம்பத்திலேயே திண்டாடியது இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது.

குறிப்பாக 2019 உலகக் கோப்பை செமி ஃபைனலில் இந்தியாவுக்கு கொடுத்த அதே மோசமான துவக்கத்தை இன்று நியூசிலாந்து பெற்றுள்ளதாக ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் அணி நிர்வாகம் ட்விட்டரில் வெளிப்படையாகவே கலாய்த்தது. அந்த வகையில் மோசமான துவக்கத்தை பெற்ற நியூசிலாந்துக்கு டார்ல் மிட்சேல் 14, மார்க் சேப்மேன் 19 ரன்களில் அவுட்டாகி மேலும் பின்னடைவை கொடுத்தனர். அதனால் 50/5 என சரிந்த அந்த அணி 100 ரன்கள் தாண்டுமா என்று எதிர்பார்க்கப்பட்ட போது முக்கிய நேரத்தில் ஜிம்மி நீசம் அதிரடியாக விளையாடி 48 (29) மிட்சேல் சான்ட்னர் 23 (22) ஆடம் மில்னே 16* (12) ரன்கள் விளாசி ஓரளவு காப்பாற்றினர்.

- Advertisement -

அதன் காரணமாக தப்பிய நியூசிலாந்து 20 ஓவர்களில் 134/9 ரன்கள் எடுத்த நிலையில் வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக சோரிஃபுல் இஸ்லாம் 3, மெஹதி ஹசன் 2, முஸ்தபிஸ்சுர் ரகுமான் 2 விக்கெட்களை எடுத்தனர். அதைத்தொடர்ந்து 135 என்ற சுலபமான இலக்கை துரத்திய வங்கதேசத்திற்கு லிட்டன் தாஸ் 42* (36) சௌமியா சர்கார் 22 (15) மெஹதி ஹசன் 19* (16) ரன்கள் அடித்து 18.4 ஓவரிலேயே 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற்று கொடுத்தனர்.

இதையும் படிங்க: 107/5 என மூழ்கிய இந்தியாவை தனி ஒருவனாக தூக்கிய ராகுல்.. பண்ட், தோனியை மிஞ்சி மாபெரும் சாதனை

இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் நியூசிலாந்து மண்ணில் முதல் முறையாக ஒரு வெற்றியை பதிவு செய்து வங்கதேசம் மாபெரும் சாதனை படைத்தது. குறிப்பாக 2009 முதல் இதற்கு முன் விளையாடிய 7 போட்டிகளிலும் தோற்ற வங்கதேசம் முதல் முறையாக தற்போது நியூசிலாந்து மண்ணில் வென்று சாதனை படைத்து 1 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது.

Advertisement