ஐ.பி.எல் தொடரில் விளையாட ஷாகிப் அல் ஹசன், முஸ்தபிசுர் ரஹ்மானுக்கு விளையாட அனுமதி மறுப்பு – காரணம் இதுதான்

Rahman
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்ற 14வது ஐபிஎல் தொடரானது 29 போட்டிகள் முடிவடைந்த நிலையில் வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக இந்த தொடரானது பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. மேலும் எஞ்சியுள்ள 31 போட்டிகளை எப்போது, எங்கு நடக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளையில் கடந்த 29ஆம் தேதி நடைபெற்ற பிசிசிஐ ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு மீதியுள்ள 31 போட்டிகளும் செப்டம்பர் மாதம் இரண்டாம் வாரம் முதல் அக்டோபர் 10ஆம் தேதிக்குள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று பிசிசிஐ அதிகாரபூர்வமான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

IPL

- Advertisement -

இந்த அறிவிப்பினால் தற்போது ஐபிஎல் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கும் இவ்வேளையில் வெளிநாட்டு வீரர்கள் இந்த தொடரில் கலந்து கொள்வதில் தொடர்ந்து சிக்கல் நிலவுகிறது. ஏற்கனவே இங்கிலாந்து வீரர்கள் இந்த ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் பங்கேற்க மாட்டார்கள் என்று இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் உறுதியாக கூறி விட்டது.

அதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய வீரர்கள் அடுத்தடுத்து தங்களுக்கு தேசிய தொடர்கள் இருப்பதன் காரணமாக விளையாட மாட்டார்கள் என்ற செய்தி வெளியாகியது. மேலும் வெஸ்ட்இண்டீஸ் நாட்டில் கரீபியன் பிரீமியர் லீக் நடைபெறுவதால் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களும் ஐபிஎல் தொடரில் விளையாடுவது தாமதமாகும் என்று அடுத்தடுத்து சில வருத்தமான செய்திகள் வெளியாகியது.

இந்நிலையில் தற்போது பங்களாதேஷ் அணியை சேர்ந்த முஸ்தபிசுர் ரஹ்மான் மற்றும் ஷகிப் அல் ஹசன் ஆகியோர் விளையாட மாட்டார்கள் என்றும் இந்த ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் அவர்கள் இருவரும் விளையாட அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று பங்களாதேஷ் கிரிக்கெட் நிர்வாகம் கூறியுள்ளது. இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அந்த கருத்தில் :

Shakib

ஷகிப் அல் ஹசன் மற்றும் முஸ்தபிசுர் ரகுமான் ஆகியோருக்கு தடையில்லா சான்றிதழை நாங்கள் வழங்க முடியாது என அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவர் நஜ்முல் ஹசன் தெரிவித்துள்ளார். மேலும் வங்கதேச கிரிக்கெட் அணிக்கு சர்வதேச போட்டிகள் இருப்பதால் அவர்களை நாங்கள் ஐபிஎல் தொடரில் விளையாட அனுமதிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement