ஸ்ட்ரைக்கை வாபஸ் பெற்ற வங்கதேசம். திட்டமிட்டபடி இந்தியத்தொடர் நடைபெறுமாம்

Ban
- Advertisement -

தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் தற்போது இந்திய அணி வென்றுள்ள நிலையில் அடுத்ததாக இந்திய அணி வங்கதேச அணிக்கு எதிரான 3 டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.

Ind vs ban 1

- Advertisement -

இந்த தொடர் வரும் நவம்பர் 3 ஆம் தேதி தொடங்கப்படும் என்று ஏற்கனவே அட்டவணை வெளியாகி இருந்தாலும் வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்தனர். எனவே இந்த தொடர் திட்டமிட்டபடி நடக்குமா என்ற சந்தேகம் தற்போது எழுந்தது. இந்நிலையில் தற்போது இதற்கான தீர்வு கிடைத்துள்ளது.

வங்கதேச வீரர்கள் சுமார் இரண்டு நாட்களுக்குப்பின் தங்களது ஸ்ட்ரைக்கை வாபஸ் பெற்றுள்ளனர் மேலும் இனி தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். வங்கதேச வீரர்களின் 11 அம்சக் கோரிக்கைகளில் 9 கோரிக்கைகளை மற்றுமே நிறைவேற்ற முடியும் என்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் உறுதியளித்துள்ளது. மேலும் இதுகுறித்து வங்கதேச அணியின் நிர்வாகி கூறுகையில் :

bangladeshs

வங்கதேச வீரருடன் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினோம் அவர்களின் பேச்சுவார்த்தை வருகைக்கு நன்றி தெரிவித்தோம். மேலும் அவர்களின் கோரிக்கையை ஏற்க கூடியதாகத்தான் இருந்தது. அதனால் பேச்சுவார்த்தையின் முடிவில் அவர்களின் 9 கோரிக்கையினை நடைமுறைப்படுத்த உறுதியளித்து இருக்கின்றோம். மேலும் இந்திய வங்கதேச கிரிக்கெட் தொடர் திட்டமிட்டபடி நவம்பர் மாதம் 3 ஆம் தேதி முதல் 26ம் தேதி வரை டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் என அனைத்தும் நடக்கும் என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement