இந்தியாவுக்கு விளையாட வந்தது ஒரு குத்தமா ? வீட்டுக்கு போகமுடியாமல் தவித்த வங்கதேச வீரர் – காரணம் என்ன தெரியுமா ?

Saif

இந்தியா சுற்றுப்பயணம் வந்த பங்களாதேஷ் கிரிக்கெட் அணி இந்திய அணிக்கு எதிராக 3 டி20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்நிலையில் இந்த இந்திய வங்கதேச தொடருக்கான வங்கதேச அணியில் சைப் ஹசன் என்ற இளம் வீரரும் இடம் பெற்றிருந்தார்.

Ban

இந்நிலையில் இந்த தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றது. கொல்கத்தா டெஸ்ட் முடிவடைந்த பின்னர் பங்களாதேஷ் அணியின் வீரர்கள் ஒருசிலர் ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தாவில் இருந்து புறப்பட்டு டாக்கா சென்றனர். மேலும் சிலர் திங்கட்கிழமை காலை விமான டிக்கெட் புக் செய்து இருந்தனர்.

இந்நிலையில் கொல்கத்தா விமான நிலையத்தில் திங்கட்கிழமை அவ்வாறு வீரர்கள் செல்ல நினைத்தபோது குடியேற்ற அதிகாரிகள் அவரது பாஸ்போர்ட்டை பரிசோதித்தனர். அப்போது வங்கதேச வீரர் சைப் ஹசனின் விசா காலாவதி ஆகி இருந்தது தெரிய வந்தது அதாவது திங்கட்கிழமை டாக்கா திரும்ப நினைத்த அவரது விசா ஞாயிற்றுக்கிழமை அன்று முடிந்துள்ளது. கடைசியாக இவருக்கு இந்தியா விசா ஜூன் மாதம் வழங்கப்பட்டது. அந்த விசாவில் 6 மாதம் வரை அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

saif 1

ஆனால் தற்போது அவர் விசா முடிவடைந்ததால் அவர் இந்தியாவை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டதே இதன் காரணமாக அமைந்தது பின்னர் அவரை விமானத்தில் பயணம் செய்ய இந்திய தூதரக அதிகாரிகள் மறுத்தனர். மேலும் இதுகுறித்து உடனே பங்களாதேஷ் கிரிக்கெட் சங்கத்திற்கு தெரிவிக்கப்பட்டது. பின்னர் டாக்காவில் இருந்து இந்திய தூதரகம் உதவியோடு அவருக்கு புதிய விசாவை நேற்று வழங்கியது. விசா காலம் முடிந்தும் இந்தியாவில் தங்கியதால் அவருக்கு 21600 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அதை கட்டிய பின் நேற்று மாலை டாக்காவிற்கு அனுப்பப் பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -