9 வருடங்களுக்கு பிறகு சாதனை படைத்த வங்கதேச அணி..!

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்குபெற்று விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி கைப்பற்றியுள்ள நிலையில், ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வங்கதேச அணி கைப்பற்றியது. கடந்த 9 ஆண்டுகளுக்குப்பின் ஆசிய நாடுகளுக்கு வெளியே நடந்த தொடரில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது வங்கதேச அணி.

bangladesh-cricket-team

மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஒரு நாள் போட்டியில் வங்கதேச அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பின்னர் இரண்டாவது ஒரு நாள் போட்டியில் மேற்கிந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகளும் 1-1 என்று தொடரில் சமநிலையில் இருந்த நிலையில்,இந்த தொடரின் முன்றாவது ஒரு நாள் போட்டி நேற்று (ஜூலை 28) நடைபெற்றது.

வார்னர் பார்க் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 301 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தமீம் இஃபால் 103 ரன்களும், முஹமதுல்லா 67 ரன்களையும் குவிந்திருந்தனர்.

இதன் பின்னர் களமிறங்கிய மேற்கிந்திய அணியில் துவக்க ஆட்டாக்காரரான கிரிஸ் கெயில் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்து 66 பந்துகளில் 73 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். மேலும், ஹோப் 64 ரன்களில் ஆட்டமிழக்க அதன் பின்னர் வந்த போவெல் அதிரடியாக விளையாடி 41 பந்துகளில் 74 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

Bangladesh v Netherlands: Group B - 2011 ICC World Cup

இருப்பினும் மேற்கிந்திய அணியின் ரன் எடுக்கும் வேகம் சற்று மெதுவாக இருந்ததால் 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 283 ரன்களை மட்டுமே குவிக்க முடிந்தது. இதன் மூலம் வங்கதேச அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியில் வெற்றி பெற்றதோடு 2-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது. இதன் மூலம் 9 ஆண்டுகளுக்குப்பின் ஆசிய நாடுகளுக்கு வெளியே நடந்த தொடரில் வெற்றி பெற்றது வங்கதேச அணி.