- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்த ஸ்ட்ரென்த் போதும்.. இந்திய அணிக்கு எதிரா எங்க வித்தையை காட்டுவோம் – வங்கதேச கோச் பேட்டி

சமீபத்தில் பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நஜ்முல் ஷாண்டோ தலைமையிலான வங்கதேச கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்தது. பாகிஸ்தான் அணிக்கு எதிராக இதுவரை டெஸ்ட் வெற்றியை பதிவு செய்யாமல் இருந்த வங்கதேச அணி முதல் போட்டியை வென்ற கையோடு இரண்டாவது போட்டியையும் வென்று இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் பாகிஸ்தான் அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது.

எங்களால் சவால் அளிக்க முடியும் :

தற்போது பாகிஸ்தான் மண்ணில் வெற்றி பெற்ற அதே நம்பிக்கையுடன் இந்திய அணிக்கு எதிரான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள வங்கதேச அணியானது இந்திய அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட காத்திருக்கிறது.

- Advertisement -

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது செப்டம்பர் 19-ஆம் தேதி நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்க இருக்கிறது. இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடருக்கு முன்னதாக பேட்டி ஒன்றினை அளித்துள்ள வங்கதேச அணியின் பயிற்சியாளரான சந்திகா ஹதுருசிங்கே கூறியதாவது :

பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றதன் மூலம் இந்திய தொடரை எதிர்கொள்வதற்கு எங்களுக்கு அதிக நம்பிக்கை கிடைத்துள்ளது. எங்கள் அணி தற்போது வெற்றிகளை குவித்து வருவதால் கூடுதல் எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் இந்த நெருக்கடியை நாங்கள் கௌரவமாக கருதுகிறோம். இந்த நெருக்கடி எங்களை சாதிக்க வேண்டும் என்கிற உத்வேகத்தை அளித்துள்ளது.

- Advertisement -

எங்களது அணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? எல்லை என்ன? என்பது குறித்த அனைத்து புரிதலையும் நாங்கள் சரியாக வைத்துள்ளோம். உண்மையிலேயே தற்போது எங்களது அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. சுழற்பந்து வீச்சாளர்களான ஷாகிப் அல் ஹசன் மற்றும் மெஹதி ஹாசன் ஆகியோர் பேட்டிங்கிலும் பலம் சேர்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க : ஒரு செஞ்சுரி அடிச்சா போதும்.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் சாதனை நிகழ்த்தப்போகும் – ரோஹித் சர்மா

அதோடு இரண்டு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களான லிட்டன் தாஸ் மற்றும் முஸ்பிகுர் ரஹ்மான் ஆகியோர் எங்களது அணியின் முக்கிய பேட்டர்ளாக உள்ளனர். வேகப்பந்து வீச்சிலும் எங்களது அணியில் சிறப்பான வீரர்கள் இருக்கின்றனர். இப்படி அனைத்தும் சேர்ந்த கலவையான அணியாக எங்களது அணி இருப்பதனால் நிச்சயம் இந்திய அணிக்கு எதிராக சவாலான செயல்பாட்டை எங்களால் வழங்க முடியும் என்கிற நம்பிக்கை உள்ளதாக அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -