வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2 – 0 (2) என்ற கணக்கில் இந்தியா வென்றது. சென்னையில் துவங்கிய அந்தத் தொடரின் முதல் போட்டியில் 280 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. அதன் பின் கான்பூரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியின் 2, 3வது நாட்கள் மழையால் முழுவதுமாக கைவிடப்பட்டது.
அதனால் டிராவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட அப்போட்டியில் கடைசி 2 நாட்களில் வங்கதேசத்தை அடித்து நொறுக்கிய இந்தியா 7 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்றது. குறிப்பாக 4வது நாளில் வங்கதேசத்தை துவம்சம் செய்த இந்தியா 34.4 ஓவரில் 285-9 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது திருப்பு முனையாக அமைந்தது. அத்துடன் அதிவேகமாக 50, 100, 150, 200, 250 ரன்கள் குவித்த அணியாகவும் இந்தியா 5 உலக சாதனைகளை படைத்தது.
அடித்து நொறுக்கிட்டாங்க:
இறுதியில் வங்கதேசத்தை 146 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா அசாத்தியமான வெற்றி பெற்றது. அதனால் பாகிஸ்தானை போல வெல்வோம் என்று சவால் விட்ட வங்கதேசத்தை தோற்கடித்த இந்தியா சொந்த மண்ணில் தங்களை கில்லி என்பதை நிரூபித்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானில் கிடைத்த வெற்றி இந்தியாவிலும் வென்று விடலாம் என்று தங்களுடைய கண்ணை மறைத்ததாக வங்கதேச அணியின் பயிற்சியாளர் சண்டிகா ஹதூர்சிங்கே கூறியுள்ளார்.
குறிப்பாக பந்து வீச்சில் ரியாக்சன் செய்வதற்குள் இந்தியா தங்களை அடித்து நொறுக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது போன்ற அதிரடியான அணுகுமுறையை இதற்கு முன் தாங்கள் பார்க்காததால் ரியாக்சன் கொடுக்க முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இந்த தோல்வியால் தங்களுடைய தகுதியை தெரிந்து கொண்டதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.
ரோஹித்துக்கு பாராட்டு:
“இது போன்ற அணுகுமுறையை இதற்கு முன் நாங்கள் பார்த்ததில்லை. அதனால் எங்களால் வேகமாக ரியாக்சன் கொடுக்க முடியவில்லை. இது போன்ற அணுகுமுறையை கையிலெடுத்து வெற்றியை கொண்டு வந்த ரோஹித் சர்மாவுக்கு இதற்கான பாராட்டுக்கள். இந்த தோல்வி உண்மையான வலியை கொடுத்துள்ளது. எங்களது பேட்டிங் ஏமாற்றத்தை கொடுத்தது”
இதையும் படிங்க: 4 ஜெர்ஸி நனைஞ்சுடுச்சு.. ரோஹித்தின் முடிவு பும்ராவுக்கும் எனக்கும் பிடிக்கலனாலும் இந்தியாவுக்காக செஞ்சோம்.. அஸ்வின்
“கடந்த சில தொடரை (பாகிஸ்தான்) போல இங்கே எங்களுடைய செயல்பாடுகளை வெளிப்படுத்தவில்லை. இங்கே நாங்கள் நிறைவற்றை கற்றுக் கொண்டுள்ளோம். இங்குள்ள சூழ்நிலையில் இந்தியாவில் விளையாடுவது மிகவும் கடினமான வேலை. எனவே எப்படி முன்னேற வேண்டும் என்பதை நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். வருங்காலத்தை நோக்கிச் செல்லும் போது இந்த அணியின் தரம் என்ன என்பதை புரிந்து செயல்படுவது அவசியம்” என்று கூறினார்.