2022 ஹீரோ அசத்திட்டாரு.. அடுத்ததா இந்தியாவை வீழ்த்துவோம்.. பாகிஸ்தானை சாய்த்த வங்கதேச கேப்டன் பேட்டி

- Advertisement -

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஏற்கனவே முதல் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக வரலாற்றில் முதல் முறையாக வங்கதேசம் வெற்றியை பதிவு செய்திருந்தது. அதனால் 2 – 0 (2) என்ற கணக்கில் பாகிஸ்தானை அதனுடைய சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்து வங்கதேசம் கோப்பையை வென்றது.

இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக முதல் முறையாக ஒரு தொடரை வென்று வங்கதேசம் சாதனை படைத்தது. மறுபுறம் சொந்த மண்ணில் ஒய்ட்வாஷ் தோல்வியை கூட தவிர்க்க முடியாத அளவுக்கு பாகிஸ்தான் மண்ணைக் கவ்வியது. இந்த வெற்றிக்கு சதமடித்த முக்கிய பங்காற்றிய லிட்டன் தாஸ் ஆட்டநாயகன் விருதையும், ஆல் ரவுண்டராக அசத்திய மெஹதி ஹசன் தொடர்நாயகன் விருதையும் வென்றனர்.

- Advertisement -

2022 ஹீரோ:

இந்நிலையில் தங்களது சொந்த மண்ணில் நடைபெற்ற 2022 ஒருநாள் தொடரில் தொடர்நாயகன் விருது வென்று இந்தியாவை வீழ்த்த உதவிய மெஹதி ஹசன் இப்போட்டியில் அசத்தியதாக வங்கதேச கேப்டன் நஜ்முல் சாண்டோ மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். எனவே வரும் செப்டம்பர் 19ஆம் தேதி துவங்கும் தங்களின் அடுத்த டெஸ்ட் தொடரில் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த மெஹதி ஹசன் உதவுவார் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“இந்த வெற்றியைப் பற்றி வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. மிகவும் மகிழ்ச்சி. இங்கே நாங்கள் வெற்றியை தேடினோம். அதற்காக எங்கள் வீரர்கள் அனைவரும் தங்களது வேலையை செய்ததில் மகிழ்ச்சி. எங்களுடைய வேகப்பந்து வீச்சாளர்களின் வேலை நெறிமுறைகள் நன்றாக இருந்தது. அதனாலேயே நாங்கள் வென்றோம். வெற்றி பெற வேண்டும் என்ற உண்மையுடன் விளையாடிய அவர்கள் அதைத் தொடர்வார்கள் என்று நம்புகிறேன்”

- Advertisement -

இந்தியாவை வீழ்த்துவோம்:

“முதல் போட்டியில் சத்மன் விளையாடிய விதம் சிறப்பாக இருந்தது. இந்தப் போட்டியில் ஜாகிர் ஹசன் விளையாடிய விதம் எங்களுக்கு நேர்மறையான வேகத்தை கொடுத்துள்ளது. அடுத்த முக்கியமான தொடருக்கு இந்த வெற்றி நிறைய தன்னம்பிக்கையை கொடுத்துள்ளது. முஸ்பிகர், ஷாகிப் ஆகியோரின் அனுபவம் இந்தியாவில் மிகவும் முக்கியம்”

இதையும் படிங்க: 1303 நாட்கள் 15 வருடங்கள்.. பாகிஸ்தான் சொந்த மண்ணில் அவமான சாதனை.. வங்கதேசம் வரலாறு காணாத வெற்றி

“இந்த சூழ்நிலைகளில் மெஹதி ஹசன் 5 விக்கெட்டுகள் எடுத்தது அற்புதமானது. இந்தியாவுக்கு எதிராகவும் அவர் அதை செய்வார் என்று நம்புகிறேன். பிளேயிங் லெவனில் இல்லாத 4 வீரர்கள் எங்கள் அணிக்கு களத்தில் உதவி செய்தனர். இந்த கலாச்சாரம் தொடரும் என்று நம்புகிறேன்” எனக் கூறினார். அதனால் வங்கதேச தொடருக்காக இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்று சொல்லலாம்.

Advertisement