பாகிஸ்தான்லயா முடியவே முடியாது. வேற எங்கனா சொல்லுங்க நாங்க வரோம் – அடம்பிடிக்கும் பங் கிரிக்கெட் வாரியம்

Ban
- Advertisement -

கிரிக்கெட் விளையாடும் நாடுகளிடையே பாகிஸ்தான் அணி பாதுகாப்பற்ற நாடாக பல நாட்டு கிரிக்கெட் நிர்வாகங்களாளும் பார்க்கப்படுகிறது. ஏனெனில் கடந்த 2009 ஆம் ஆண்டு பாகிஸ்தான் சென்ற இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தப்பட்டது. இலங்கை அணி வீரர்கள் சென்ற பேருந்தின் மீது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் சில வீரர்கள் காயமடைந்தனர்.

Pak-1

- Advertisement -

இந்த நிகழ்வு நடந்து சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக பாதுகாப்பு காரணம் கருதி எந்த ஒரு கிரிக்கெட் அணியும் பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் தொடரில் பங்கேற்ப கிடையாது. பொதுவான இடமான துபாய் போன்ற யுஏஇ நாடுகளுக்கு சென்று கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று விளையாடி வந்தது.

ஆனால் தற்போது இலங்கை அணி பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியது. அதனைத்தொடர்ந்து தற்போது பாகிஸ்தான் நாட்டில் வங்கதேச அணியுடன் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற இருந்தன. இந்நிலையில் இந்த தொடரில் வங்கதேச கிரிக்கெட் அணி விளையாட மாட்டார்கள் என்று கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. மேலும் இது குறித்து பேசிய வங்கதேச தலைமை நிர்வாகி கூறுகையில் :

பாகிஸ்தானில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியாது. டி20 போட்டிகள் நடத்தினால் மட்டுமே நாங்கள் விளையாடுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளோம். பாதுகாப்பு காரணங்களுக்காக டெஸ்ட் தொடரில் எங்கள் வீரர்கள் அங்கு விளையாட மாட்டார்கள் என்றும் அவர் கூறினார். ஆனால் தொடர்ந்து பாகிஸ்தான் நிர்வாகம் அவர்களை அழைத்தாலும் அவர்களின் கோரிக்கையை பங்களதேஷ் அணி ஏற்பதாக தெரியவில்லை.

Bangladesh

முடிவாக வங்கதேச அணி டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் நாட்டில் நிச்சயம் நாங்கள் விளையாட மாட்டோம் அப்படி விளையாடுவது என்றால் வேறு நாடுகளில் போட்டியை நடத்துங்கள் அப்போது விளையாடலாம் என்பது போல தங்களது பதிலை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement