உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணி லீக் சுற்றில் வெளியேறினாலும் அந்த அணி மிகச்சிறப்பாக தொடர் முழுவதும் செயல்பட்டது. இந்நிலையில் அந்த அணியின் சுழற்பந்து வீச்சு வீச்சாளர்களுக்கு புதிய பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
உலக கோப்பை 2019 தொடரில் வங்கதேச அணி அரையிறுதிக்கு முன்னேறி விட்டாலும் பல பெரிய அணிகளை வீழ்த்தி அசத்தியது. தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளை சிறப்பாக வீழ்த்தியது.
இந்த தொடரில் வங்கதேச அணி சார்பாக சாகிப் அல் ஹசன் 606 ரன்கள் குவித்து அதிக ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்தார். அதோடு 8 போட்டியில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இந்நிலையில் வங்கதேச அணிக்கு புதிய சுழற்பந்து பயிற்சியாளராக நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் டேனியல் வெட்டோரி நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோன்று பேட்டிங் பயிற்சியாளராக இந்திய அணியின் வாசிம் ஜாபர் நியமிக்கப்பட்டுள்ளார் அதே போன்று வேகப்பந்துவீச்சாளர்களுக்கு லாங்வெல்ட் நியமிக்கப்பட்டுள்ளார் இதனால் அந்த அணி வாரும் ஆண்டுகளில் மேலும் முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.