ஐபிஎல் தொடரிலிருந்து கிட்டத்தட்ட மும்பை வெளியேறியது ! – காரணம் இதோ

MUMBAI
- Advertisement -

8 போட்டிகளில் இரண்டு வெற்று பிலே ஆப் சுற்றிற்கு கூட தகுதி பெரும் வாய்ப்பை குறைத்துக் கொண்ட நடப்பு ஐபிள் சாம்பியன்ஸ் அணி. பிலே ஆப் சுற்றிற்கு நுழையும் வாய்ப்பை புதுப்பித்துக் கொண்டது பெங்களூரு அணி.

kohli
நேற்று ஐபிள் தொடரின் 31 வது போட்டியில் பெங்களூர் மற்றும் மும்பை அணி மோதியது.டாசை வென்ற மும்பை அணி பெங்களூர் அணியை முதலில் களமிறங்க செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான டீ காக் 7 ரன்களில் அட்டமிழக்க ,வோஹ்ரா அபாரமாக விளையாடி 31 பந்துகலில் 45 ரன்களை எடுத்து அட்டமிழந்தார்.

- Advertisement -

பின்னர் களமிறங்கிய மேக் குல்லாம் மற்றும் கோலி ஜோடி சற்று நிதானமாக ஆடினார். இதனால் அணியின் எண்ணிக்கை கனிசமாக உயர்ந்தது.பின்னர் இருவருமே ஹார்டிக் பாண்டியவின் மூலம் வெளியேற பின்னர் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களிலேயே அவுட் ஆகினார். இதனால் 20 ஓவர் முடிவில் 167 ரன்களை எடுத்தது பெங்களூரு அணி.

rohit

பின்னர் களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் இஷாந்த் கிஷான் ஒரு பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவருக்கு பின்னாலேயே யாதவும் 9 ரன்களை வெளியேறினார். அதன் பின்னர் களமிறங்கிய ஜே பி டுமுனி ஓரளவிற்கு மைதானத்தில் நின்றுவர மறு முனையில் மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டக் அவுட் ஆகி வெளியேறினார். இதன் மூலமே அந்த அணியின் வெற்றி வாய்ப்பை ரசிகர்கள் புரிந்து கொண்டனர்.

ஆனால் பின்னர் களமிறங்கிய பாண்டியா அதிரடியாக விளையாடி அணியின் ரன்களை உயர்த்தினார். பின்னர் வழக்கம் போல மும்பை அணியின் சனிபகவான் வேலை செய்ய ஆரம்பித்தார் . இறுதியில் 42 பந்துகளில் 50 ரன்களை குவித்து பாண்டியாவும் பெவிலியன் திரும்பினார். இறுதியில் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பெங்களூரு அணி. இதன் மூலம் 8 போட்டிகளில் 3 வெற்றியை பெற்று புள்ளிப்பட்டியளில் 5 வது இடத்திற்கு முன்னேறியது பெங்களூரு அணி.

Advertisement