அங்க ஒரே சண்டையாம். பங்களாதேஷ் அணி இந்தியா வரமாட்டாங்களாம் – விவரம் இதோ

Ban
- Advertisement -

இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் தொடர் முடிந்தவுடன் பங்களாதேஷ் கிரிக்கெட் அணி நவம்பர் மாதம் துவக்கத்தில் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடிவு செய்ததுள்ளது.

Ind vs ban 1

- Advertisement -

ஆனால் தற்போது அந்நாட்டு வீரர்கள் அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகத்தை எதிர்த்து போராட்டத்தில் குதித்துள்ளனர். அதன்படி அவர்களுக்கு முதல்தர போட்டிகளில் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் போட்டிகளிலும் போதிய அளவு ஊதிய உயர்வு கொடுக்கவில்லை என்ற காரணத்தை முன்வைத்து அவர்கள் கோரிக்கை நிறைவேறும் வரை இனிமேல் சர்வதேச போட்டியில் பங்கேற்க போவதில்லை என்று ஸ்ட்ரைக் செய்து வருகின்றனர்.

இதனால் பங்களாதேஷ் அணி இந்தியா வந்து டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுவது சந்தேகம் ஆகியுள்ளது. அப்படி விளையாடினாலும் முன்னணி வீரர்கள் இல்லாமல் அந்த அணி இந்தியா வரும் என்றும் தெரிகிறது. டெஸ்ட் மற்றும் டி20 அணியின் கேப்டன் ஷாகிப், முஷ்பிகுர் ரஹீம், முஹமதுல்லா ஆகியோர் இதை நேற்று அறிவித்துள்ளனர். இது பற்றி இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக தேர்வாக உள்ள கங்குலி கூறும்போது :

shakib

இது தொடர்பாக நாங்கள் பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்திற்கு கடிதம் எழுத இருக்கிறோம் மேலும் கொல்கத்தாவில் நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் பங்கேற்க பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அழைப்பு விடுத்துள்ளோம் அவர் பங்கேற்பதாக உறுதி அளித்துள்ளார். பிரதமர் மோடிக்கும் மற்றும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாவுக்கும் அழைப்பு விடுக்க இருக்கிறோம் என்று கங்குலி கூறியிருக்கிறார்.

Advertisement