சண்ட போடுவாங்கனு நான் நினைக்கல. அந்த சண்டைக்கு காரணமே இதுதான் – மனம் திறந்த பங்களாதேஷ் கேப்டன்

Ind-u-19
- Advertisement -

19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் ஆடிய இந்திய அணி கடுமையாக சொதப்பி 177 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

ind u 19

- Advertisement -

பின்னர் எளிதான இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி தட்டுத்தடுமாறி கடைசியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டி முடிந்தவுடன் இரு அணி வீரர்களும் கை கொடுக்க சென்றபோது சில வங்கதேச வீரருடன் இந்திய வீரர்கள் கைகலப்பில் ஈடுபட்டனர். கைகலப்பு பெரிதாக நடப்பதற்கு முன்னதாகவே இந்த சம்பவத்தின் தடுக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த மைதானத்தில் சற்று மோசமான நிகழ்வாக அமைந்தது .

இதுகுறித்து வங்கதேச கேப்டன் அக்பரலி பேசியதாவது : போட்டி நன்றாக முடிந்தது. ஆனால் இறுதியில் நடந்த சம்பவங்கள் எங்களையும் முகம் சுளிக்க வைத்தது. எங்களது சில பந்துவீச்சாளர்கள் ஆக்ரோசமாக இருந்தனர் . இதனால் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் இவை தவிர்க்கப்பட வேண்டும் . இந்திய அணியினருக்கு நாங்கள் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக உழைத்தோம். அதற்கான பலன் இது என்று கூறினார்.

ban

இதே நேரத்தில் இந்திய அணியின் கேப்டன் பிரியம் கர்க் இதுகுறித்து கூறுகையில் : நாங்கள் 230 ரன்கள் எடுத்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் நாங்கள். மிகவும் மனமுடைந்து போய் விட்டோம் எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என கடுமையாக உழைத்தோம். அவ்வளவு எளிதாக வெற்றியை விட்டுக் கொடுக்கவில்லை என்று கூறினார்.

Advertisement