அப்ரிடியை தொடர்ந்து கொரோனா உறுதி செய்யப்பட்ட பங்களாதேஷ் அணியின் கேப்டன் – ரசிகர்கள் வருத்தம்

Mortaza
- Advertisement -

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பேரழிவுகளை ஏற்படுத்தி உலகெங்கிலும் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் பரவல் காரணமாக உயிரிழப்புகள் மட்டுமின்றி, பொருளாதார இழப்பையும் அனைத்து நாடுகளும் வருகின்றன. மேலும் கொரோனா காரணமாக உலகெங்கும் முற்றிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

Corona-1

- Advertisement -

இதுவரையிலும் உலகம் முழுவதும் சுமார் 88 லட்சம் பேர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே உலகெங்கும் அனைத்து வகை விளையாட்டுப் போட்டிகள், பொது நிகழ்ச்சிகள் என மக்கள் கூடும் அனைத்து நிகழ்ச்சிகளும் தடை செய்யப்பட்டு பொது ஊரடங்கு நிலவு வரும் இவ்வேளையில் பிரபலங்கள் பலருக்கும் கொரோனோ பரவல் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக கிரிக்கெட் வீரர்கள் பலரையும் கொரோனா தொற்று பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே இந்த கொடிய வைரஸ் காரணமாக சில வீரர்கள் பாதிப்படைந்த நிலையில் கடந்த வாரம் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடி பாதிக்கப்பட்டார். தற்போது ஒருவாரமாக சிகிச்சையில் இருக்கும் அவர் சற்று உடல்நலம் தேரியுள்ளதாக வீடியோ ஒன்றினை வெளியிட்டு இருந்தார்.

Mortaza 2

தற்போது அதனைத் தொடர்ந்து தற்போது பங்களாதேஷ் அணியின் முன்னணி வீரர் மற்றும் முன்னாள் கேப்டனுமான மோர்தசா கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளார். கடந்த வியாழக்கிழமை இரவு முதல் அவர் கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் அதன் பிறகு நடைபெற்ற கொரோனா பரிசோதனையில் அவருக்கு நோய் தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

வங்கதேச அணியின் சீனியர் வீரரான இவர் 36 டெஸ்ட் போட்டிகள், 220 ஒருநாள் போட்டி மற்றும் 54 டி20 போட்டிகளில் அந்த அணிக்காக விளையாடி உள்ளார். இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதியாகி உள்ளதால் அந்நாட்டு ரசிகர்கள் இடையே இந்த செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே கொரோனா பாதிப்பு காரணமாக இந்தியாவில் நடைபெற இந்த மிகப்பெரிய தொடரான ஐபிஎல் மற்றும் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்த டி20 உலககோப்பை ஆகிய தொடர்கள் நடைபெறுவது சந்தேகத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement