100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருந்தாலும் புதுமுக வீரர் போல் பந்துவீச கஷ்டப்படுறாரு – பல்வீந்தர் சிங் ஆவேசம்

IND
- Advertisement -

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்ததால் இந்திய அணியின் மீது கிரிக்கெட் ரசிகர்களும், முன்னாள் வீரர்களும் மிகுந்த அதிருப்தியில் இருக்கின்றனர். இந்த போட்டியில் இந்திய அணியானது ஏன் தோல்வியைத் தழுவியது என்று ஒவ்வொருத்தரும் தங்களது கருத்துகளை கூறி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டி குறித்து கருத்து தெரிவித்திருக்கும் இந்திய அணியின் முன்னாள் வீரரான பல்விந்தர் சிங் சந்த், இந்திய பவுலர்கள்தான் தோல்விக்கு காரணம் என்று கூறியிருப்பதோடு மட்டுமல்லாமல் மூத்த வீரர் ஒருவரின் செயல்பாட்டையும் விமர்ச்சித்து உள்ளார்.

ishanth 1

- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிரான இந்த இறுதிப் போட்டியில் முதல் இன்னிங்சில் அற்புதமாக பந்து வீசி அசத்திய இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளர்களால், இரண்டாவது இன்னிங்சில் ஒரு விக்கெட்டைக்கூட வீழ்த்த முடியவில்லை. குறிப்பாக முதல் இன்னிங்சில் முதல் விக்கெட்டை எடுத்துக் கொடுத்த ஸ்பின்னரான ரவிச்சந்திரன் அஷ்வின் மட்டுமே இரண்டாவது இன்னிங்சில் விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். நியூசிலாந்து அணியின் வேகப் பந்து வீச்சாளர்கள் இரண்டு இன்னிங்சுகளிலும் பவுலிங்கில் மிரட்டிய நிலையில், இந்திய பவுலர்களால் ஒன்றுமே செய்ய முடியாமல் போனது.

இதனால் அவர்களின்மேல் அதிருப்தி அடைந்துள்ளார் பல்வீந்தர் சிங் சந்த். தனியார் வலைதளம் ஒன்றிர்கு அவரளித்த பேட்டியில் இஷாந்த சர்மாவையும், ஜாஸ்பிரித் பும்ராவையும் கடுமையாக விமர்ச்சித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது, முதல் இன்னிங்சில் மிகச் சிறப்பாக பந்து வீசிய இந்திய பவுலர்கள் இரண்டாவது இன்னிங்சில் அதை செய்யத் தவறிவிட்டனர். குறிப்பாக அவர்களுடைய லைன் மற்றும் லென்த் மொத்தமாக மாறிப்போயிருந்தது. எளிதாக விளையாடக்கூடிய பந்துகளை வீசி நியூசிலாந்து அணிக்கு ரன்களை வாரி வழங்கிவிட்டனர்.

ishanth 2

100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பின்னரும் இஷாந்த் சர்மா ஏதோ ஒரு புதுமுக வீரர்போல பந்து வீசுகிறார். மற்றொரு வீரரான ஜாஸ்பிரத் பும்ராவும் அதேபோலதான் நடந்து கொண்டார். முக்கியமாக இந்திய அணியின் பவுலிங் யூனிட்டை தலைமை தாங்கி வழிநடத்திச் செல்ல வேண்டிய இஷாந்த சர்மா அதை செய்யத் தவறிவிட்டார். என்னைப் பொறுத்தவரை முஹம்மது ஷமி தான் அதை செய்தார் என்று அவர் கூறியுள்ளார்.

ishanth 1

முதல் இன்னிங்சில் மூன்று விக்கெட்டுகள் எடுத்த இஷாந்த் சர்மா இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் வீழ்த்தவில்லை என்பதோடு மட்டுமல்லாமல், பவுலங்கின்போது கை விரலில் ஏற்பட்ட காயத்தினால் ஆட்டத்தின் பாதியில் இருந்தும் வெளியேறிவிட்டார். இதனால் எதிர்வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் விளையாடுவது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. மற்றொரு வீரரான ஜாஸ்பிரத் பும்ரா இந்த போட்டியில் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement