- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஒரே நாளில் 30.. கபில் தேவை நெருங்க முடியலன்னா டாட்டா சொல்லிட்டு அதை மறந்துடுங்க.. பும்ரா மீது சந்து அதிருப்தி

ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி தோல்வியை சந்தித்தது. அதனால் 5 போட்டிகளில் 32 விக்கெட்டுகள் எடுத்து தனி ஒருவனாக போராடிய ஜஸ்ப்ரித் பும்ராவின் போராட்டம் வீணானது. முன்னதாக அந்த தொடரில் மற்ற பவுலர்கள் சுமாராக செயல்பட்டதால் விக்கெட் தேவைப்படும் போதெல்லாம் ஜஸ்ப்ரித் பும்ரா பந்து வீச வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

அதன் காரணமாக முழுமூச்சுடன் தொடர்ந்து பந்து வீசிய அவர் கடைசி போட்டியின் கடைசி நாளில் காயத்தை சந்தித்ததால் விலகினார். ஒருவேளை பும்ரா பவுலிங் செய்திருந்தால் அப்போட்டியில் இந்தியா வென்றிருக்கும் என்று சொல்லலாம். ஆனால் அப்படி காயத்தை சந்திக்கும் அளவுக்கு அவரை அதிகமாக பவுலிங் செய்ய வைத்து பணிச்சுமையை நிர்வகிக்காத இந்திய அணி நிர்வாகத்தை ஹர்பஜன் சிங் போன்ற முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர்.

- Advertisement -

பணிச்சுமைன்னா என்ன:

இந்நிலையில் நாட்டுக்காக விளையாடும் போது பணிச்சுமை என்ற பெயருக்கு இடமில்லை என 1983 உலகக் கோப்பை வென்ற முன்னாள் இந்திய வீரர் பல்வீந்தர் சந்து தெரிவித்துள்ளார். ஒருவேளை டெஸ்ட் போட்டிகள் கடினமாக இருந்தால் டாட்டா சொல்லிவிட்டு டி20யில் மட்டும் விளையாடுமாறு பும்ரா மீது அவர் அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“பணிச்சுமையா? இந்தத் தொடரில் அவர் எவ்வளவு ஓவர்கள் வீசினார்? 150 சரியா? ஆனால் அதை அவர் 5 போட்டிகளில் 9 இன்னிங்ஸில் வீசினார் அல்லவா? அப்படிப் பார்த்தால் அது ஒரு இன்னிங்ஸில் 16 ஓவர்கள் அல்லது ஒரு போட்டிக்கு 30 ஓவர்கள். இத்தனைக்கும் அவர் அந்த 15 ஓவர்களை ஒரே மூச்சாக வீசவில்லை. ஸ்பெல் வாரியாக பிரித்து தான் வீசினார்”

- Advertisement -

கபில் தேவ் மாதிரி:

“அப்படிப்பட்ட சூழ்நிலையில் பணிச்சுமை என்பது எப்படி ஏற்படும். இது போன்ற விஷயங்கள் ஆஸ்திரேலியர்கள் உருவாக்கியதாகும். அதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஏனெனில் நான் வீரர்கள் தங்களுடைய உடல் சொல்வதைக் கேட்காத காலத்திலிருந்து வந்தவன். 15 ஓவர்களை ஒரு நாளில் அதுவும் பிரித்து வீசுவது பெரிய விஷயமல்ல. இத்தனைக்கும் இன்று உங்களை கவனித்துக் கொள்ள சிறந்த உடற்பயிற்சியாளர்கள், மருத்துவர்கள் உள்ளார்கள்”

இதையும் படிங்க: உண்மையாவே அக்கறை இருந்தா இதை செஞ்சு ஆக்சனில் காட்டுங்க.. ரோஹித்துக்கு சஞ்சய் பங்கர் அட்வைஸ்

“அதனால் ஒரு இன்னிங்ஸில் 20 ஓவர்கள் வீச முடியாத பவுலர் இந்தியாவுக்காக விளையாடுவதை மறந்து விட வேண்டும். இல்லையெனில் டி20 கிரிக்கெட்டில் மட்டும் விளையாடுங்கள். அதில் கூட 4 ஓவர்களை 3 ஸ்பெல்லாக பிரித்து வீசுவார்கள். நாங்கள் ஒரு நாளில் 25 – 30 ஓவர்கள் வீசுவோம். கபில் தேவ் தனது கேரியர் முழுவதும் நீண்ட ஸ்பெல்களை வீசினார். அப்படி நீங்கள் பவுலிங் செய்து கொண்டே இருந்தால் உங்கள் உடல் சீராகி விடும் என்பதால் பணிச்சுமை என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்” எனக் கூறினார்.

- Advertisement -