டெஸ்ட்போட்டியில் பந்தை சேதப்படுத்தியதற்காக இலங்கை அணிக்கு விதிக்கப்பட்ட அபராதம்..!

ball
- Advertisement -

கடந்த மாதம் தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய அணியின் வீரர்கள் சிலர் பந்தை சேதபடுத்திய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் துணை கேப்டின் டேவிட் வார்ணர் மற்றும் இளம் வீரர் கேமரூன் பான்க்ராஃப்ட் ஆகியோருக்கு கிரிக்கெட்டில் ஓராண்டு தடை விதிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் தற்போது இலங்கை அணியின் கேப்டனும் இதே போன்ற சர்ச்சையில் சிக்கியுளளார்.

srilankan test

- Advertisement -

மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி, வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்று பயணம் மேற்கொண்டது. கடந்த மே 30 ஆம் தேதி நடந்த பயிற்சி ஆட்டம் ட்ராவில் முடிவடைந்தது. மேலும், இந்த தொடரின் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 226 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த ஜூன் 14 ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் இலங்கை அணி 253 ரன்களும் வெஸ்ட் இண்டீஸ் அணி 300 ரன்களும் எடுத்து. இந்த போட்டியின் இரண்டாவது நாளின் போது இலங்கை அணியின் கேப்டன் சன்டிமல் தனது பேண்ட் பைக்குள் இருந்து ஒரு துணியை எடுத்து பந்தை நன்றாக தேய்த்துள்ளார். இது மைத்தானத்தில் இருந்த கேமராவில் நன்றாக பதிவாகியுள்ளது.

sri-lanka-vs-west-indies

இதனால் சண்டிமல் பந்தை சேதப்படுத்தி விட்டார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் 3 ஆம் நாள் ஆட்டத்தில் சண்டிமல் 2 மணி நேரம் கழித்தே மைத்தனதிற்கு சென்றார். மேலும், அவர் செய்த செயலுக்கு அபராதமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 5 ரன்கள் வழங்கப்பட்டது. இந்நிலையில் அவர் வெறும் ஒரு துணி கொண்டு தான் பந்தை தேய்த்தார் என்பதால் அவருக்கு அதிபட்சமாக ஒரு போட்டியில் மட்டும் தடை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கபடுக்கறது.

Advertisement