வெயிட் பண்ணாதீங்க.. கதவை உடைச்சி வாங்க.. ருதுராஜ் மற்றும் நட்டுவிற்கு நம்பிக்கை அளித்த – லட்சுமிபதி பாலாஜி

Balaji
- Advertisement -

அண்மையில் நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய இந்திய கிரிக்கெட் அணியானது அடுத்ததாக தற்போது இலங்கையில் நடைபெற உள்ள மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இருக்கின்றது. இந்த இரண்டு தொடர்களுக்கான இந்திய அணியும் இலங்கை சென்று அடைந்தது. வரும் ஜூலை 27-ஆம் தேதி துவங்கும் இந்த தொடரானது ஆகஸ்ட் முதல் வாரத்தில் முடிவுக்கு வருகிறது.

இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேளையில் அதில் சில வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது ரசிகர்கள் மத்தியில் பெரிய ஏமாற்றத்தை அளித்தது. அதிலும் குறிப்பாக ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ், சன்ரைசர்ஸ் வீரரான நடராஜன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படாதது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்தது.

- Advertisement -

இந்நிலையில் கிருஷ்ணகிரி நகரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் தமிழக வீரருமான பாலாஜி அது தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :

இந்திய அணிக்கு தேர்வாகாமல் போன முதல் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் கிடையாது. அதேபோன்று கடைசி வீரரும் அவர் கிடையாது. கிரிக்கெட் ஜாம்பவான்களாக பார்க்கப்படும் கபில்தேவ், கவாஸ்கர், கங்குலி கூட ஒரு கட்டத்தில் ஓரங்கட்டப்பட்டனர். அதனால் யாருமே இந்திய அணிக்கு தேர்வாக வேண்டும் என்ற பொறுமையை இழந்து விடக்கூடாது.

- Advertisement -

அணியில் தேர்வு செய்யப்படுவதும், செய்யப்படாமல் போவதும் நமது கையில் இல்லை. வாய்ப்புக்கான கதவு திறக்கட்டும் என்று காத்திருக்கக் கூடாது. கதவை உடைத்து கொண்டு உள்ளே வர வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் ருதுராஜ் மற்றும் நடராஜன் ஆகியோர் இனிவரும் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு நிச்சயம் இந்திய அணிக்கு திரும்புவார்கள் என்று நம்பிக்கைய இருப்பதாகவும் பாலாஜி குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : அந்த 2 தொடரில் ரெஸ்ட் எடுத்து இந்தியாவை சாய்க்க ரெடியாகுறேன்.. இம்முறை நான் கேப்டன்.. கமின்ஸ் சவால்

ஏற்கனவே ருதுராஜ் கெய்க்வாட் தேர்வு செய்யப்படாதது குறித்து பேசிய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் கூறுகையில் : 15 பேர் கொண்ட வீரர்களை மட்டும் தான் அணிக்கு தேர்வு செய்ய முடியும். சிறப்பாக விளையாடிய ரிங்கு சிங் டி20 உலக கோப்பையில் அணியில் இடம் பிடித்திருந்தாலும் ரிசர்வ் வீரராகவே சேர்க்கப்பட்டிருந்தார். அப்படித்தான் தேர்வு கடுமையாக இருந்து வருகிறது என்று அந்த தேர்வினை நியாயப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement