இவங்க நம்ம பக்கம் இருக்கும் வரை நமக்கு எப்போவுமே வெற்றிதான். சி.எஸ்.கே பவுலிங் கோச் – பாலாஜி பேட்டி

Balaji

இந்தியாவில் தனது தாக்கத்தை அதிகமாக ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. இதன் காரணமாக ஐபிஎல் தொடரை இந்த ஆண்டு இந்தியாவில் நடக்க முடியாது என்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டு அடுத்த மாதம் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை அங்கு ஐபிஎல் தொடர் நடைபெற இருக்கிறது.

CskvsMi

இதற்காக அனைத்து அணி வீரர்களும் தற்போது மும்முரமாக தயாராகி வருகிறார்கள். மேலும் ஐக்கிய அரபு அமீரகம் செல்வதற்கு முன்னால் அனைத்து வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதன் பிறகே அவர்கள் அங்கு பயணிக்க உள்ளனர். வீரர்கள் சென்னை வரும் முன்னரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

அதற்கு முன்னர் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் 20ம் தேதி வரை சென்னையில் பயிற்சி நடைபெறும் என்றும் அந்த பயிற்சியை தமிழக வீரர் லட்சுமிபதி பாலாஜி தலைமை தாங்கி நடத்துவார் என்றும் கூறப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய லட்சுமிபதி பாலாஜி பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் கூறியதாவது :

Balaji

சென்னை அணியில் சீனியர் வீரர்கள் இருப்பது அணிக்கு மிகவும் பலமாக இருக்கிறது. இவர்கள் அணியின் வெற்றிக்காக பல முறை உதவி இருக்கிறார்கள். சென்னை அணி கோப்பையை வெல்வதற்கு சீனியர் வீரர்கள் கட்டாயம் உதவிகரமாக இருப்பார்கள். நீண்ட இடைவெளிக்கு பிறகு பயிற்சி முகாம் சென்னையில் துவங்க இருப்பதால் வீரர்களுக்கு சற்று கடினமாகவே இருக்கும்.

- Advertisement -

Balaji-3

இருப்பினும் நம் மணிகள் உள்ள வீரர்கள் அனைவரும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் என்பதால் மீண்டும் இயல்பு நிலைக்கு எவ்வாறு திரும்புவது எப்படி என்பதை அவர்கள் நன்கு அறிவர் சென்னை அணியில் சீனியர் வீரர்கள் இருக்கும் வரை நமக்கு எப்போதும் வெற்றிதான் என்று லட்சுமிபதி பாலாஜி பேசியது குறிப்பிடத்தக்கது.