- Advertisement -
உலக கிரிக்கெட்

Jonny Bairstow : என்னுடைய இந்த சிறப்பான ஆட்டத்திற்கு vvs லஷ்மண் தான் காரணம் – பேர்ஸ்டோ

உலகக் கோப்பை தொடரின் 38வது போட்டி எட்ஜ்பாஸ்டன் நகரில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதின.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது அதன்படி முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 337 ரன்கள் குவித்தது அதிகபட்சமாக பேர்ஸ்டோ 111 ரன்களை குவித்தார். பென் ஸ்டோக்ஸ் 79 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

பிறகு 338 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 306 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரோகித் சர்மா 102 ரன்கள் குவித்தார். இதன் மூலம் இந்திய அணி இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தோல்வியை இந்திய அணிக்கு இந்த தொடரின் முதல் தோல்வி என்பதும் குறிப்பிடத்தக்கது.

போட்டி முடிந்து பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ கூறியதாவது : இந்த போட்டியில் நாங்கள் டாஸ் வென்ற போதும் போட்டியில் மைதானத்தின் தன்மை எப்படி செல்லும் என்பது என்பதற்கேற்ப விளையாடினோம். போட்டி கடைசியில் எங்கள் வசமானது நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டிக்கு முன் தயாராக வேண்டும் என்று இன்றைய போட்டியில் நாங்கள் நினைத்தோம். அதனால் நான் நிதானமாக ஆடினேன்.

விவிஎஸ் லட்சுமணன் கொடுத்த அறிவுரைகள் எனக்கு மிகவும் உதவின. அவர் ஸ்பின் பவுலிங் எதிராக எப்படி விளையாட வேண்டும் என்று முழு விவரத்தினையும் எனக்கு கற்றுக்கொடுத்தார். அது இன்றைய போட்டியில் எனக்கு மிகவும் உதவியது. இந்திய பவுலர்கள் வீசும் பொழுது அதனை திறம்பட எதிர்கொள்ள அவர் கொடுத்த அறிவுரைகளே காரணம் மீதி வரும் போட்டிகளில் இதேபோன்று ஆடி அணிக்கு வெற்றி தேடித் தருவேன் என்று பேர்ஸ்டோ கூறினார்.

- Advertisement -
Published by