கெட்ட வார்த்தையில் அசிங்கமாக திட்டிய இங்கிலாந்து வீரர். அதிரடி காட்டிய ஐசிசி – விவரம் இதோ

Bairstow

இங்கிலாந்து அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் கலந்துகொண்டு விளையாடியது. இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகளில் இரு அணிகளும் இரு வெற்றிகளை பெற்றிருந்த நிலையில் தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டியில் நியூசிலாந்து அணி 146 ரன்கள் எடுத்தது.

Eng vs Nz

பின்னர் அதனை துரத்திய இங்கிலாந்து அணி பேர்ஸ்டோ அதிரடியில் மூலம் 146 ரன்கள் அடித்து போட்டியை டை செய்தது. பின்னர் சூப்பர் ஓவரில் இங்கிலாந்து அணி 17 ரன்களை அடித்தது அதனைத் தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி சூப்பர் ஓவரில் 8 ரன்கள் மட்டுமே அடித்ததால் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய பேர்ஸ்டோ 18 பந்துகளில் 47 ரன்களை குவித்தார். மேலும் அவரே ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் அவுட் ஆனபோது அவுட்டான விரக்தியில் பவுலரை ஆபாசமாக வார்த்தைகளை வெளிப்படுத்தி திட்டிக்கொண்டே மைதானத்தை விட்டு வெளியேறினார். அவரின் இந்த கெட்ட வார்த்தைகள் ஸ்டம்ப் மைக்கில் நன்றாக பதிவானது.

Eng

மேலும் தான் செய்த இந்த தவறை பேர்ஸ்டோ ஒப்புக்கொண்டுள்ளார். இதனால் ஐசிசி விதிமுறைகளின்படி ஆபாசமான வார்த்தைகளைப் பேசுவது தவறு அதை அவர் மீறியதால் அவருக்கு ஒரு டிமெரிட் புள்ளியும் அபராதமும் வழங்கியுள்ளது. மேலும் ஐசிசி அவருக்கு கடும் எச்சரிக்கை விடுத்து டிமெரிட் புள்ளிகள் அதிகமானால் சில போட்டிகளில் விளையாட தடை செய்யும் வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -