சன் ரைசர்ஸ் அணி வீரரின் உயிர் காக்கும் கவசத்தை உடைத்த கொல்கத்தா வேகபந்துவீச்சாளர் – வைரல் வீடியோ

Bairstow
- Advertisement -

இன்று மதியம் துவங்கிய ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா இடையேயான போட்டியில் முதலி பேட்டிங் செய்த சன் ரைசர்ஸ் அணி வீரரான பேர்ஸ்டோ கொல்கத்தா வீரர் வீசிய பந்தில் அடிவயிற்றில் அடி வாங்கினார். இதனால் அவருடைய உயிர் காக்கும் கவசம் விரிச்சலுற்றது. இதோ அந்த வீடியோ :

- Advertisement -

அடிவாங்கிய அந்த வீரர் இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோ ஆவார். இந்த ஐபிஎல் சீசனில் முதல் போட்டியில் தான் சந்தித்த முதல் பந்தை தலைக்கு நேராகவும், அடுத்த பந்தை அடிவயிற்றிலும் வாங்கி இந்த தொடரினை ஆரம்பித்துள்ளார் பேர்ஸ்டோ. இந்த போட்டியில் அவர் 35 பந்துகளில் 39 ரன்களை அடித்தார்.

ஐ.பி.எல் தொடரின் இரண்டாவது போட்டி இன்று 24 தேதி துவங்கியது. சற்றுமுன் 3.30 மணிக்கு இவ்விரு அணிகளுக்கும் இடையே டாஸ் போடப்பட்டது. இந்த டாசில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் ஆடிய சன் ரைசர்ஸ் அணி 20 முடிவில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 181 ரன்களை குவித்தது. அந்த அணி சார்பில் வார்னர் அதிரடியாக ஆடி 53 பந்துகளில் 85 ரன்களை குவித்தார். மேலும், தமிழக வீரரான விஜய் ஷங்கர் 24 பந்துகளில் 40 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் 182 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்க தயாராகி வருகிறது.

Advertisement