ஆஷஸ் தொடரின் 5வது டெஸ்ட் போட்டி தற்போது லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 225 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த தொடரின் 4 போட்டிகளைப் போலவே 5 ஆவது போட்டியிலும் ஸ்மித் தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்தார். அதிகபட்சமாக 80 ரன்கள் குவித்த வோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
Jonny Bairstow, top notch shithousery #TheAshes2019 pic.twitter.com/hwp4j176Gf
— Ollie Green (@OllieGreen_) September 13, 2019
இந்த போட்டியிலும் ஸ்மித்தை வீழ்த்த முடியாமல் திணறிய இங்கிலாந்து வீரர்கள் இறுதியில் எப்படியோ அவரது விக்கெட்டை வீழ்த்தினார்கள். இந்நிலையில் ஒரு கட்டத்தில் ஸ்மித் ஆடிக்கொண்டிருந்த போது இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோ ஸ்மித்தை ரன்அவுட் செய்வதுபோல் நடித்தார்.
ஆனால் அவர் நடிப்பதை எதிர்பாராத ஸ்மித் ரன்அவுட்டில் இருந்து தன்னை காத்துக் கொள்ள டைவ் அடித்தார். அதன்பிறகு பேர்ஸ்டோ போலியாக இதனை செய்தார் என்பதைக் கண்ட ஸ்மித் எழுந்து அவரை நோக்கி சிரித்தார். இந்த விடயம் தற்போது இணையத்தில் வீடியோவாக வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.