சச்சினுடன் விளையாடிய தமிழக வீரருக்கு கொரோனா உறுதி – ஆபத்தில் முடிந்த சாலை பாதுகாப்பு தொடர்

Badrinath

2020-2021 ஆம் ஆண்டுக்காண சாலை பாதுகாப்பு தொடர் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்தியா, ஆஸ்திரேலியா, ஸ்ரீலங்கா, தென் ஆப்பிரிக்கா, மேற்கு இந்திய தீவுகள், இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் போன்ற அணிகள் சாலை பாதுகாப்பு டி20 தொடரில் விளையாடினர். ஆடிய 7 அணிகளில் அரையிறுதி சுற்றுக்கு இந்தியா, மேற்கிந்திய தீவுகள், ஸ்ரீலங்கா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் தேர்வு பெற்றன.

sachin

முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி மோதிக் கொண்டனர் அதில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஸ்ரீலங்காவும் தென் ஆப்பிரிக்க அணியின் மோதிக்கொண்டதில் ஸ்ரீலங்கா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் பின்னர் இறுதிப் போட்டியில் இந்திய மற்றும் ஸ்ரீலங்கா அணிகள் மோதின. இதில் முதலில் ஆடிய இந்திய அணி 181 ரன்கள் அடித்தது. பின்னர் விளையாடிய ஸ்ரீலங்கா அணி 167 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து 14 ரன்கள் மூலம் தோல்வியை தழுவியது. இதன் மூலம் இந்திய அணி தொடரை கைப்பற்றியது. மொத்த தொடரில் இந்திய அணியில் அதிகபட்சமாக சச்சின் டெண்டுல்கர் 7 இன்னிங்ஸ்களில் 233 ரன்கள் குவித்தார்.மற்றொரு பக்கம் யூசப்பதான் 5 போட்டிகளிலும் முனாஃப் படேல் 7 போட்டிகளிலும் விளையாடி இந்திய அணிக்காக அதிகபட்சமாக தலா 9 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.

Irfan

மிக மிகப் பாதுகாப்பாக முறையில் நடந்து முடிந்த சாலை பாதுகாப்பு தொடர் தற்பொழுது இந்திய வீரர்களுக்கு தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது. முதலில் சச்சின் டெண்டுல்கருக்கு ஏற்பட்ட அறிகுறிகளை அடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை நடந்தது. அதில் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து , அவர்
தற்பொழுது தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

- Advertisement -

Badrinath

சச்சின் டெண்டுல்கரை அடுத்து அதே தொடரில் விளையாடிய யூசுப் பதான் மற்றும் சுப்ரமணியம் பத்ரிநாத்துக்கும் அடுத்தடுத்து கொரோனா தொற்று தொற்றிக்கொண்டுள்ளது. இதனையடுத்து சச்சின் டெண்டுல்கரை போலவே இவ்விரு வீரர்களும் தனிமையில் தங்களுக்கு உரிய சிகிச்சை பெற்று வருகின்றனர்.