ஒரு பிளேயர் வேலைக்கு ஆகமாட்டார்னு தோனி நெனச்சிட்டா என்ன செய்வார் தெரியுமா ? – பத்ரிநாத் பகிர்ந்த தகவல்

Badrinath
- Advertisement -

மகேந்திர சிங் தோனி ஒரு வீரர் அணிக்கு செட் ஆவாரா மாட்டாரா என்பதை சரியாக தேர்வு செய்யும் திறமை கொண்டவர். அதிலும் ஒரு வீரரை தேர்வு செய்துவிட்டால் அவரிடமிருந்து அணிக்கு என்ன வேண்டும் என்பதை சரியாக வாங்கிவிடுவார். இவரால் பந்து மட்டும் தான் வீச முடியும், இவரால் பேட்டிங் மட்டும் தான் பிடிக்க முடியும் இவரால் இவரால் மூன்று வேலையும் செய்ய முடியும் என்று அவர் கணித்து விட்டால் அதற்கு ஏற்ப அந்த வீரரை சரியாக பயன்படுத்துவார்


.
இந்நிலையில் தோனியின் தலைமையில் விளையாடிய பத்ரிநாத் பற்றிய அவரது கேப்டன்ஷிப் ஸ்டைலைப் பற்றி பேசியுள்ளார். 2008 ஆம் ஆண்டிலிருந்து 2013ம் ஆண்டுவரை தோனியின் சிஎஸ்கே அணியில் அவர் விளையாடியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் தோனியின் தலைமையில் விளையாடியது குறித்து அவர் கூறுகையில்…

- Advertisement -

அணியில் ஒவ்வொரு வீரருக்கான வேலை என்ன என்பதை மட்டுமே தோனி சரியாக பார்ப்பார். இக்கட்டான சூழலில் இருக்கும்போது அணியை சரிவில் இருந்து மீட்டெடுப்பது தான் எனது வேலை .நான் மிடில் ஆர்டர் தான் ஆடுவேன். அதே நேரத்தில் தோனி எப்போதும் வீரர்களுக்கு அதிக வாய்ப்புகள் கொடுப்பார்.

Badrinath

ஒரு வீரர் நல்ல வீரர், அவரிடம் திறமை இருக்கிறது என்று நினைத்து விட்டால் கண்டிப்பாக நமக்கு அணியில் இடம் கிடைக்கும். அதிக வாய்ப்புகளும் கிடைக்கும். அவருக்கு நம்மீது நம்பிக்கை வர வேண்டும் அவ்வளவுதான். அப்படி தோனி நம் மீது நம்பிக்கை வைத்து விட்டால் நமக்கு தொடர்நது வாய்ப்புகள் கிடைக்கும்.
.
அதே நேரத்தில் ஒரு வீரர் தேற மாட்டார் என்று நினைத்து விட்டால் அந்த வீரருக்கு கடவுளால் கூட கடைசி வரை உதவ முடியாது. யார் வந்து என்ன சொன்னாலும் தோனியின் மனநிலையை மாற்ற முடியாது என்று கூறியுள்ளார் பத்திரிநாத்.

Dhoni

தோனி தலைமையில் சென்னை அணி இதுவரை 3 முறை ஐ.பி.எல் கோப்பைகளை கைப்பற்றியது மட்டுமின்றி, விளையாடிய அனைத்து தொடர்களிலும் பிளேஆப் சுற்றுக்கு முன்னேறிய ஒரே அணி என்ற சாதனையும் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement