சி.எஸ்.கே அணிக்கு முதலில் கேப்டனாக இருந்தவர் இவர்தான். அவருக்கு பதிலா தான் தோனி வந்தாரு – பத்ரிநாத் பேட்டி

Badrinath
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் டி20 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் சிஎஸ்கே அணி ஆரம்பித்ததில் இருந்து தற்போது வரை அணிக்கு வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்து வருபவர் தோனி. தோனியின் தலைமையில் இதுவரை சிஎஸ்கே மூன்று முறை கோப்பைகளை வென்றுள்ளது அதுமட்டுமின்றி சி.எஸ்.கே அணி பங்கேற்ற அனைத்து தொடர்களிலும் பிளேஆப் சுற்று வரை சென்று அசத்தியது.

dhonidecision

- Advertisement -

மேலும் சிஎஸ்கே அணி ஐ.பி.எல் வரலாற்றில் ஒரு வெற்றிகரமான அணியாக உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளது. இந்த வெற்றிக்கு மிக முக்கிய காரணமாகவும், இவ்வளவு பெரிய ரசிகர்கள் கூட்டத்திற்கு காரணமாகவும் அமைந்தவர் தோனி தான் என்றால் அது மிகையல்ல.

இந்நிலையில் தற்போது சிஎஸ்கே அணிக்கு முதலில் கேப்டனாக தேர்வு செய்யப்பட இருந்தவர் தோனி இல்லை என்றும் மற்றொரு வீரருக்கு பதிலாக தான் சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி ஒப்பந்தம் ஆனார் என்றும் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரரான பத்ரிநாத் கூறியுள்ளார். ஐபிஎல் தொடரின் சில சீசன்களில் சென்னை அணிக்காக விளையாடி உள்ள பத்ரிநாத் இது தொடர்பாக கூறுகையில் :

Badrinath

2008 ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலம் துவங்குவதற்கு முன் சிஎஸ்கே தோனியை ஏலத்தில் எடுக்க முயற்சிக்கவில்லை. இந்திய அணியின் அதிரடி துவக்க வீரரான ஷேவாக்கைத்தான் சிஎஸ்கே அணி முதலில் கேப்டனாக வாங்க முயன்றது. ஆனால் சச்சின், கங்குலி, டிராவிட் ஆகியோர் தங்களது சொந்த அணிக்காக விளையாட விருப்பம் தெரிவித்திருந்தனர்.

- Advertisement -

அதேபோல சேவாக்கும் தனது சொந்த அணிக்கு விளையாட விருப்பம் தெரிவித்ததால் டெல்லி அணிக்காக அவர் தேர்வு செய்யப்பட்டு கேப்டனாக மாறினார். இதனை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நட்சத்திர வீரர் ஒருவரை தேர்வு செய்ய முயன்றனர். அந்த வகையில் 2007ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டனான தோனியை சிஎஸ்கே அணி வாங்கியது.

Sehwag

அவ்வாறு தான் தோனி சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக மாறினார். அதன் பின்னர் தற்போது சி.எஸ்.கே அணியின் ஒரு பெரிய முகமாகவே தோனி மாறியுள்ளது பெருமையாக உள்ளது என்றும் பத்ரிநாத் குறிப்பிடத்தக்கது.

Advertisement