பாக் கேப்டனை பாதிலேயே கத்தவிட்ட சக வீரர் – வைரலாகும் வீடியோ

Azam

ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி நேற்று கான்பெரா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் முடிவில் 150 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துதால் 151 ரன்கள் எடுத்தால் ஆஸ்திரேலிய அணி வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 18.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்மித் 80 ரன்கள் அடித்து அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் ஆட்டநாயகனாக திகழ்ந்தார். இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பேட்டிங் செய்யும்போது 38 பந்துகளை சந்தித்து 50 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

மேலும் இவர் இந்த போட்டியில் விளையாடிக்கொண்டிருந்த போது பந்தினை தட்டிவிட்டு ஒரு ரன் ஓட முயற்சித்தார். அப்போது எதிரில் இருந்த இப்திகார் அகமது ரன் ஓடாமல் இருந்ததால் அவர் களத்திலேயே தனது கோபத்தை காட்ட ஆரம்பித்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இதனை ஆஸ்திரேலிய அணி கிரிக்கெட் நிர்வாகம் சித்தரித்து கேப்டனை வருத்தப்படாத வைக்காதீர்கள் என்று என்பதுபோல கிண்டல் செய்து அந்த வீடியோவை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.