கோலி அளவிற்கு நான் இன்னும் வளரவில்லை. அவரைப்போன்று விளையாட ஆசைப்படுகிறேன் – பாக் வீரர் விருப்பம்

Azam
- Advertisement -

இந்திய அணியின் கேப்டனும், உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனான விராத் கோலியுடன் பல அணிகளின் முன்னணி வீரர்களை ஒப்பிட்டுப் பேசுவதை வழக்கமாக பலர் வழக்கமாக வைத்துள்ளனர். கோலியுடன் ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித், இங்கிலாந்து வீரர் ரூட் மற்றும் நியூசிலாந்து வீரர் வில்லியம்சன் ஆகியோர் ஒப்பிடப்பட்டு வருகின்றனர்.

Kohli 3

- Advertisement -

அந்த வகையில் விராட் கோலியுடன் ஓப்பிடப்படும் ஒரு பாகிஸ்தான் வீரர் யாரெனில் அந்த அணியை சேர்ந்த இளம் வீரரான பாபர் அசாம். கடந்த சில ஆண்டுகளாகவே பாகிஸ்தான் அணிக்காக தனது சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வரும் அவர் கோலியுடன் ஒப்பிடப்பட்டு அனைவரும் பேசி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது cricbuzz இணையதளத்திற்காக வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே உடன் பேசிய பாபர் அஸம் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும் கோலி உடனான அவரது ஒப்பீடு குறித்து மனம் திறந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : உலக அளவில் இருக்கும் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவர் விராட் கோலி. அவரோடு ஒப்பிடப்படும் அளவிற்கு நான் இன்னும் வளரவில்லை.

நான் இன்னும் கிரிக்கெட்டில் நிறைய சாதிக்க வேண்டியிருக்கிறது. அவரைப்போல எதிர்வரும் காலத்தில் விளையாட முயற்சி செய்வேன். என் நாட்டிற்காக நிறைய போட்டிகளை வென்று கொடுக்க முயல்வேன். மேலும் நான் ரன்கள் ஸ்கோர் செய்வது மற்றவர்கள் கூறுவதற்காக அல்ல அணியின் வெற்றிக்காக என்று அவர் கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய பாபர் அசாம் எனக்காகவும், என் அணிக்காகவும் ரன்களை எடுக்கிறேன்.

Babar

என ஆட்டத்தின் மூலம் ரசிகர்களை மகிழ்வித்து அணியை வெற்றி பெறச் செய்வது மட்டுமே எனது நோக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பாபர் அசாம் பாகிஸ்தான் அணிக்காக இதுவரை 26 டெஸ்ட் போட்டிகள், 74 ஒருநாள் போட்டிகள் மற்றும் 38 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது

Advertisement