Virat Kohli : விராட் கோலி ஆடுவதை வீடியோவில் பார்த்து பயிற்சி எடுக்கிறேன் – பாக் வீரர்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நாளை 16ஆம் தேதி மான்செஸ்டர் நகரில் நடைபெறவுள்ளது பொதுவாக இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றால் விறுவிறுப்பு

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நாளை 16ஆம் தேதி மான்செஸ்டர் நகரில் நடைபெறவுள்ளது பொதுவாக இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றால் விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சம் இருக்காது.

Pakistan

- Advertisement -

அதே போன்று இந்த தொடரிலும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி அதிக வரவேற்பினை பெற்றுள்ளது. இந்நிலையில் நாளைய இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிக்காக இரு அணிகளை சேர்ந்த வீரர்களும் தீவிரமாக பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் நாளைய போட்டியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியை சேர்ந்த வீரரான பாபர் அசாம் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி குறித்து தனது பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது : நான் விராத் கோலியை விளையாடுவதை பார்த்து பயிற்சி எடுத்து வருகிறேன். ஏனெனில் அவரது பேட்டிங் ஸ்டைல் பல்வேறு சூழ்நிலைகளில் சிறப்பாக இருக்கும். அதனால் அவருடைய ஸ்டைலை அப்படியே வீடியோவில் பார்த்து நான் பயிற்சியினை மேற்கொள்கிறேன்.

விராட் கோலியின் வெற்றியின் சதவீதமும் அதிகமாக உள்ளது. அதனால் நானும் அவரைப் போல அதிகம் சாதிக்க நினைக்கிறேன். கடந்த 2 வருடத்திற்கு முன்பு இந்திய அணி பாகிஸ்தான் அணி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் வீழ்த்தியது அதேபோன்று இந்த தொடரிலும் நாங்கள் இந்திய அணியை வீழ்த்துவோம் பாபர் அசாம் கூறினார்.

Advertisement