பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 5000 ரன்களுக்கு மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் கிட்டத்தட்ட நான்காயிரம் ரன்களை நெருங்கியும், டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த மூன்றாவது வீரர் என்ற சாதனையையும் பெற்றிருக்கிறார். அது தவிர்த்து சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையும் சையித் அன்வருக்கு பிறகு இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
ஆனாலும் சமீப காலமாகவே கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும்அவரது பார்ம் மிகுந்த மோசமாக இருந்து வருகிறது. குறிப்பாக நடைபெற்று முடிந்த மூன்று ஐசிசி தொடர்களிலும் அவரது தலைமையிலான பாகிஸ்தான் அணி லீக் சுற்று போட்டியிலே வெளியேறி இருக்கிறது.
இதன் காரணமாக பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டுள்ள பாபர் அசாம் சமீபத்தில் ஏபி டிவில்லியர்ஸ் உடன் கலந்து கொண்ட பேட்டி ஒன்றில் கிரிக்கெட்டில் தான் கற்றுக் கொள்ள வேண்டிய விடயங்கள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : விராட் கோலி, வில்லியம்சன், ஜோ ரூட் ஆகிய மூன்று பேரிடம் நான் அதிக அளவு பேச வேண்டும். அவர்களிடம் இருந்து ஏற்கனவே பல அறிவுரைகள் கேட்டிருக்கிறேன். இருந்தாலும் அவர்களிடம் இருந்து இன்னும் நிறைய கிரிக்கெட் தொடர்பான அறிவுரைகளை கற்றுக் கொள்ள விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் கூறுகையில் : நான் ஒரு ஏழை குடும்பத்தில் இருந்து வந்திருக்கிறேன். எங்களிடம் எப்போதும் பணம் இருந்தது கிடையாது. ஆனாலும் என்னுடைய பெற்றோர்கள் உறுதுணையாக இருந்ததால் தான் இவ்வளவு தூரம் முன்னேற முடிந்தது.
இதையும் படிங்க : 45 நிமிடத்தில் 10 விக்கெட்.. 3.5 நாள் வெ.இ போராட்டத்தை ஒரே செஷனில் முடித்த இங்கிலாந்து வெற்றி.. சோயப் பசீர் 2 சாதனை
சின்ன வயதில் தெருவில் கிரிக்கெட் விளையாடி கற்றுக் கொண்டேன். அதன் பிறகு கிரிக்கெட் பந்துகளை விளையாடும் போது கடினமாக இருந்தது என்று அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக அவர் வங்கதேச அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.



