ஒருநாள் தரவரிசை பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்து பாபர் அசாம் – விராட் கோலிக்கு எந்த இடம் தெரியுமா ?

Advertisement

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆன ஐசிசி அவ்வப்போது நடைபெறும் மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளுக்கும் தரவரிசைப் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் நடைபெற்று முடிந்த உடன் ஒருநாள் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் பெரிய அளவு மாற்றம் ஏதுமில்லை.

EngvsPak

இங்கிலாந்து அணிக்கு எதிராக அந்நாட்டில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடிய பாகிஸ்தான் அணி இந்த மூன்று போட்டிகளிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இங்கிலாந்து அணியிடம் 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை இழந்தது. இந்நிலையில் இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் சொதப்பிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் மூன்றாவது போட்டியின் போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

139 பந்துகளில் 158 ரன்கள் குவித்து அசத்தினார். இந்த ரன்களே அவரது ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச ரன்களாக அமைந்தது மட்டுமின்றி ஐசிசி தரவரிசை பட்டியலில் அவரை தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்க வைத்துள்ளது. முதல் இடத்தில் உள்ள பாபர் அசாம் 873 புள்ளிகள் பெற்றுள்ளார். அவரை விட 16 புள்ளிகள் குறைவாகப் பெற்று இந்திய அணி கேப்டன் விராட்கோலி இரண்டாவது இடத்தில் உள்ளார்.

azam

ரோகித் சர்மா 825 புள்ளிகளுடன் 3வது இடத்திலும், ராஸ் டைலர் நான்காவது இடத்திலும், ஆரோன் பின்ச் ஐந்தாவது இடத்திலும் இருக்கின்றனர். தற்போது வெளியான ஐசிசியின் இந்த ஒருநாள் தரவரிசை பட்டியலின் படி இந்த மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடிய பாபர் அசாமுக்கு பாராட்டுகள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement