நான் எதுக்கும் சளைச்சவன் இல்ல. விராட் கோலியின் மிகப்பெரிய சாதனையை சமன் செய்த – பாபர் அசாம் அசத்தல்

Babar-Azam-and-Virat-Kohli
- Advertisement -

தற்போதைய மாடர்ன் டே கிரிக்கெட்டில் இந்திய ஜாம்பவான் விராட் கோலியுடன் அதிகளவு ஒப்பிட்டு பேசப்பட்டு வீரராக மாறியுள்ள பாகிஸ்தான அணியின் கேப்டன் பாபர் அசாம் தொடர்ச்சியாக சர்வதேச கிரிக்கெட்டில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 27 வயதே ஆன அவர் பாகிஸ்தான் அணிக்காக கடந்த 2015 ஆம் ஆண்டு அறிமுகமாகி இதுவரை மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார். ஒவ்வொரு தொடர் நடைபெற்று முடிந்த பிறகும் அவரைப் பற்றி பேச வைக்கும் பாபர் அசாம் தற்போது பாகிஸ்தான் மண்ணில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் டி20 தொடரிலும் விராட் கோலியின் முக்கிய சாதனை ஒன்றினை சமன் செய்து தன்னை பற்றி பேச வைத்துள்ளார்.

Babar Azam

- Advertisement -

அதன்படி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணியானது அங்கு 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தற்போது பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் ஐந்து போட்டிகள் முடிவடைந்த நிலையில் பாகிஸ்தான் அணியானது மூன்றுக்கு இரண்டு (3-2) என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலை பெற்றிருந்த வேளையில் நேற்று லாகூர் மைதானத்தில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஆறாவது டி20 போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணியானது பாபர் அசாமின் அசத்தலான ஆட்டம் காரணமாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் குவித்தது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி சார்பாக 59 பந்துகளை சந்தித்த கேப்டன் பாபர் அசாம் 7 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் என 89 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

Babar Azam 1

பின்னர் 170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணியானது பிலிப் சால்டின் அசத்தலான அதிரடி ஆட்டம் காரணமாக எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்த தொடரானது மூன்றுக்கு மூன்று (3-3) என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடிய பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாம் 87 ரன்கள் அடித்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியின் மிகப்பெரிய சாதனையை சமம் செய்துள்ளார். அதன்படி டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 3000 ரன்களை கடந்த வீரராக ஏற்கனவே விராட் கோலி அந்த சாதனையை நிகழ்த்தி முதலிடத்தில் இருந்தார். விராட் கோலி தனது 81-வது இன்னிங்ஸில் டி20 கிரிக்கெட்டில் 3000 ரன்களை தொட்டிருந்தார்.

இதையும் படிங்க : டி20 உலக கோப்பை 2022 : வெற்றியாளருக்கு பரிசு எத்தனை கோடிகள்? – வெளியான முழு பரிசு பட்டியல் இதோ

இந்நிலையில் அவரது இந்த சாதனையை நேற்று பாபர் அசாம் சமன் செய்துள்ளார். பாபர் அசாமும் நேற்றைய போட்டியில் 87 ரன்கள் குவித்தன் மூலம் சரியாக 81-வது இன்னிங்ஸில் 3000 ரன்களை அவர் பூர்த்தி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு அடுத்தபடியாக மார்டின் குப்தில் 101 இன்னிங்ஸ்களிலும், ரோகித் சர்மா 108 இன்னிங்ஸ்களிலும் டி20 கிரிக்கெட்டில் 3000 ரன்களை தொட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement