இங்க கேப்டன் நான்தான். என்கிட்ட ஒரு வார்த்தை கேளுங்க – நேற்றைய போட்டியில் நடைபெற்ற சுவாரசியம்

Babar-Azam
Advertisement

ஆசியக் கோப்பை தொடரின் “சூப்பர் 4” சுற்று போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்தது. நேற்று நடைபெற்ற “சூப்பர் 4” சுற்றின் கடைசி ஆட்டத்தில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணியும் மோதின. இவ்விரு அணிகளுக்கும் இடையே இறுதிப்போட்டி நடைபெற உள்ளதால் நேற்றைய போட்டி இரு அணிகளுக்குமே ஒரு சம்பிரதாய போட்டியாக இருந்தது.

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு ஒரு நம்பிக்கையுடன் செல்லும் என்பதனால் நேற்றைய போட்டி பெரிய எதிர்பார்ப்பை பெற்றது. அந்த வகையில் நேற்று துபாய் சர்வதேச சமைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தார்.

- Advertisement -

அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியானது இலங்கை அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 121 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதனை தொடர்ந்து 122 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இலங்கை அணி நிசாங்காவின் அரை சதம் காரணமாகவும், பனுக்கா ராஜபக்சே மற்றும் ஷனகா ஆகியோரது அதிரடி காரணமாகவும் எளிதாக பாகிஸ்தான அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.

அதோடு நாளை நடைபெற உள்ள இறுதிப் போட்டியிலும் அந்த அணி நம்பிக்கையோடு களமிறங்க உள்ளது. இந்நிலையில் முக்கியமான நேற்றைய போட்டியில் நடைபெற்ற ஒரு சுவாரசியமான சம்பவம் தற்போது இணையத்தில் விடியோவாக வைரலாகி வருகிறது. அதன்படி இலங்கை அணி பவர்பிளே ஓவர்களில் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளரான ஹசன் அலி பந்து வீசினார்.

- Advertisement -

அப்போது இலங்கை வீரர் பேட்டிங் செய்து கொண்டிருக்கையில் ஹசன் அலி வீசிய பந்து பேட்டில் பட்டு கேட்சாகியுள்ளது என்று நினைத்த பவுலரும், விக்கெட் கீப்பர் ரிஸ்வானும் தாங்களாகவே முடிவு செய்து கொண்டு அம்பயரிடம் டி.ஆர்.எஸ் கேட்டனர். அவர்களின் வேண்டுகோளுக்காக களத்தில் இருந்த நடுவர் மூன்றாவது நடுவரை நாடினார்.

இதையும் படிங்க : ஆசிய கோப்பையில் சுமாராக செயல்பட்டும் டி20 உ.கோ அணியில் தேர்வாகக்கூடிய 4 இந்திய வீரர்களின் பட்டியல்

அப்போது அதைப்பார்த்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் அவர்கள் இருவரையும் நோக்கி நான்தான் இங்கு கேப்டன். என்னை கேட்காமலே நீங்கள் எப்படி முடிவு எடுக்கலாம் என்பது போன்று வீரர்களை நோக்கியும், அம்பையரை நோக்கியும் சில வார்த்தைகளை பகிர்ந்தவாரே நடந்து சென்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement