- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அன்று இந்தியாவை சாய்த்ததே என் வாழ்நாள் சாதனை.. பாகிஸ்தானுக்கு அதை வெல்வதே அடுத்த லட்சியம்.. பாபர் அசாம்

பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் பாபர் அசாமை தங்களுடைய சூப்பர் ஸ்டாராக கொண்டாடுகிறார்கள். ஒரு காலத்தில் விராட் கோலியை விட சிறந்தவர் என்று அவர்களால் கொண்டாடப்பட்ட பாபர் சமீப காலங்களில் தடுமாற்றமாக விளையாடினார். அதனால் கேப்டன்ஷிப் பதவியை இழந்த அவர் 2023க்குப்பின் சதமடிக்க முடியாமல் திண்டாடி வந்தார்.

அதனால் விமர்சனங்களை சந்தித்த பாபர் அசாம் சுமார் 3 வருடங்கள் கழித்து சமீபத்தில் இலங்கைக்கு எதிராக சதத்தை அடித்து நிம்மதி பெருமூச்சு விட்டார். இந்நிலையில் 2021 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவை தம்முடைய தலைமையில் பாகிஸ்தான் தோற்கடித்தது தமது வாழ்நாளில் மறக்க முடியாத மிகப்பெரிய சாதனை என்று பாபர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

வாழ்நாள் சாதனை:

அத்துடன் பாகிஸ்தானுக்கு ஐசிசி கோப்பையை வென்று கொடுப்பதே தம்முடைய அடுத்த லட்சியம் என்றும் அவர் கூறியுள்ளார். அதற்காக மிகவும் கடினமாக உழைத்து தம்மை ஃபிட்டாக மாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி கெவின் பீட்டர்சன் யூடியூப் பக்கத்தில் பாபர் பேசியது பின்வருமாறு. “இந்தியாவை தோற்கடித்தது எனக்கு மிகப்பெரியது. 2021இல் நாங்கள் இந்தியாவை டி20 கிரிக்கெட்டில் தோற்கடித்தோம்”

“அதுவே என்னைப் பொறுத்த வரை என்னுடைய சிறந்த நினைவாகும். முதல் முறையாக பாகிஸ்தான் கேப்டனாக நான் இந்தியாவை உலகக் கோப்பையில் தோற்கடித்தேன்” என்று கூறினார். அப்போது குறுக்கிட்ட கெவின் பீட்டர்சன் பேசியது பின்வருமாறு. “இந்தியா – பாகிஸ்தான் போட்டிகள் உலக விளையாட்டில் மிகப்பெரிய நிகழ்வு என்று நான் எப்போதும் சொல்வேன். அதை விட பெரிது கிடையாது”

- Advertisement -

பாபரின் லட்சியம்:

“மக்கள் கால்பந்து உலகக் கோப்பை ஃபைனல் பற்றி பேசுவார்கள். அதில் நான் விளையாட விரும்புகிறேன். ஆஷஸ் தொடரிலும் விளையாடியுள்ள நான் இந்தியா – பாகிஸ்தான் விளையாடியிருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று கூறினார். அதைத் தொடர்ந்து பாபர் பேசியது பின்வருமாறு. “நீங்கள் சொல்வது போல் இந்தியா – பாகிஸ்தான் போட்டிகள் வேற லெவலானது. பெரியது”

இதையும் படிங்க: தூங்காத இரவுகளை கொடுத்த விராட், ரோஹித் இதை செஞ்சா.. 2027 உ.கோ விளையாடுவாங்க.. மோர்கெல் பேட்டி

“அடுத்ததாக ஒரு ஐசிசி கோப்பையை நான் வெல்ல விரும்புகிறேன். நாங்கள் (2022இல்) ஃபைனல் வரை சென்றும் தோல்வியை சந்தித்தோம். அதனாலேயே இப்போது என்னுடைய ஃபிட்னஸ் மற்றும் திறமையில் நான் கடினமாக உழைத்து வருகிறேன். தற்போது ஃபிட்டாக இருக்க முயற்சிக்கும் என்னுடைய உடல் வித்தியாசமாக ஆக்டிங் செய்கிறது. இப்போதும் நான் கூர்மையாக இருக்கிறேன்” என்று கூறினார். இருப்பினும் 2021 தோல்விக்குப்பின் விளையாடிய 8 போட்டிகளிலும் பாகிஸ்தானை 8 முறை இந்தியா தொடர்ச்சியான தோற்கடித்து வெற்றிகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -